Scribus - DTP மென்பொருள் 1.4.2


கதை ,கட்டுரை மற்றும் துணுக்குகள் போன்றவைகளுடன் படங்களையும் இணைத்து வாசகர்களை கவருந்தன்மையுடன் இதழ்களை(magazine) உருவாக்குவது என்பது மிகவும் சிரமமான பணியாக இருந்துவந்தது ,ஆனால் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக கணினியின் மென்பொருளில் ஏற்பட்ட முன்னேற்றங்களினால் இவைகளை  மிகச்சுலபமாக உருவாக்கலாம் என்ற நிலை தற்போதுள்ளது,
Adobe creative suite 3,  Quark Xpress போன்ற பயன்பாட்டு மென்பொருள்களின் வரவால்
பத்திரிகை துறை மிகவும் பெரிதும் முன்னேற்ற மடைந்துள்ளது என்பதே  உண்மையாகும் ஆனாலும் இந்த DTP பயன்பாட்டு மென்பொருட்களுக்கு ரூபாய் 35000 முதல் 40000 வரை செலவிட வேண்டியுள்ளது,
2001 ஆம் ஆண்டிற்கு பிறகுமென்பொருள் துறையானது  திறமூலமாக மாறிவரும் சூழலில்Franz Scmid என்பவர் scribus என்ற DTPக்கான இலவச மென்பொருள் நிரல்தொடரை லினக்ஸ் தளத்தில் இயங்குமாறு வெளியிட்டுள்ளார்.

இது லினக்ஸ் தளத்தில் மட்டுமல்லாது விண்டோ மற்றும் மேக் தளங்களிலும் நன்கு செயல்படும் தன்மையுடன் விளங்குகிறது
வரைகலை வடிவமைப்பாளர் இதனை தங்களுக்கு பொருத்தமானதாக இல்லை என குறை கூறினாலும் பின்வரும் பல்வேறு வகையான நோக்கங்களுக்காக இதனை பயன்படுத்தி கொள்ளலாம்
1, செய்திதாள், பருவ இதழ், சுவர்விளம்பரபடம், அழைப்பிதழ்அட்டை உருவாக்குவதற்காக
2,அச்சிடும் நிறுவனங்களில் பல்வேறு அச்சிடும் பணிகளுக்காக
3, லோகோ மற்றும் மாதிரிகளை அச்சிடுவதற்காக
4,படைப்புகளை பிடிஎஃப் ஆக உருமாற்றம் செய்து பயன்படுத்த
டிடிபி ஆனது சிக்கலான  வெவ்வேறு வடிவமைப்புகளை உடைய பலஉறுப்புகளை உள்ளடக்கியதாகும், அதனால் இந்த பணியின்போது ஏராளமான பிழை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன,அச்சுக்குமுன் இவ்வாறு ஏற்படும் பிழைகளை கண்டுபிடிக்க preflight verifier என்ற கருவி பயன்படுகிறது, இவ்வாறான வாய்ப்புகள் scribus லும் உள்ளது.
 Size:67.20MB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget