'தி அவேஞ்சர்ஸ்' ஹாலிவுட் திரை விமர்சனம்

அவேஞ்சர்ஸ் ஏப்ரல் மாதம் ஹாலிவுட் திரையுலகில் வெளியாகி ஒரு வாரத்திற்குள் படத்தின் மொத்த செலவு உட்பட இதுவரை வெளியான ஹாலிவுட் திரைப் படங்கள் ஒரு வாரத்துக்குள் ஹிட்டான ரேட்டிங்கில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. இத்திரைப்படம் மார்வெல் காமிக்ஸில் இதுவரை வெளியான சூப்பர் ஹீரோ படங்களின் ஹீரோக்கள் அனைவரும் ஒன்றினைந்து உலகத்தைக் காப்பாற்றப் புறப்பட்டால் எப்படியிருக்கும் எனும் கருவில் உருவாக்கப்பட்டது.


அதாவது இதற்கு முன் வெளி வந்த சூப்பர் ஹீரோ படங்களின் ஹீரோக்களான தோர்,கேப்டன் அமெரிக்கா,அயர்ன் மேன்,ஹுல்க்,ஹாவ்கேயே மற்றும் பிளாக் விடோ ஆகிய அனைவரும் S.H.I.L.D எனப்படும் சர்வதேச அமைதி காக்கும் நிறுவனத்தின் தலைவரான நிக் ஃபியூரியுடன் இணைந்து நம் உலகம் எதிர் கொள்ளவுள்ள மிகப் பெரிய ஆபத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுவதே இதன் கதை. இது மார்வெல் காமிக்ஸின் முந்தைய படமான 'தோர்' இன் தொடர்ச்சி ஆகும்.

அதாவது பூமி உட்பட ஏனைய உயிர்கள் வாழும் 9 கிரகங்களைக் கட்டுப் படுத்தும் வல்லமையுடன் தோரின் தந்தையார் ஒரு கிரகத்தை ஆண்டு வருகின்றார். இவருக்கு இரு மகன்கள். இவர்கள் தோர் மற்றும் லோக்கி ஆவார்கள். இதில் இளையவனான லோக்கி பனி அரக்கர்களின் வாரிசும் வளர்ப்பு மகனும் ஆவான். இதில் தோர் வளர்ந்து இடிகளின் அரசனாகி விடுவான். இவர்கள் இருவருக்கும் ஏற்படும் பிரச்சனையும் அதில் தோர் வெற்றி பெறுவதுமே முதற் பாகமான தோரின் கதை.


இப்படத்தின் முடிவில் பிரபஞ்சத்தின் தலைவனாக ஆசைப்படும் லோக்கியின் கொடுஞ் செயலால் இவர்களின் கிரகத்தையும் பூமி உட்பட ஏனைய கிரகங்களையும் இணைக்கும் பாலம் தோரினால் உடைக்கப் பட்டு விடும். இதனைத் தொடர்ந்து அவேஞ்சர்ஸ் படம் தொடங்கும் போது பூமிக்கு விஜயம் செய்யும் லோக்கி S.H.I.E.L.D ஏஜன்ஸியின் கட்டுப்பாட்டு மையத்துக்குள் புகுந்து துவம்சம் செய்து அங்கிருக்கும் பிரபஞ்சத்தை இணைக்கும் பாலத்தை உருவாக்க வல்ல சக்திகள் அடங்கிய நீல நிற பெட்டியை கவர்ந்து சென்று விடுகின்றான்.

இவனைத் தடுக்கவும் பிரபஞ்சத்தை இணைக்கும் பாலம் உருவாக்கப் பட்டால் அதனூடாக பூமியைக் கைப்பற்ற வரும் தீய சக்திகளை அழிக்கவும் S.H.I.E.L.D ஏஜன்ஸியின் தலைவன் நிக் ஃபியூரி பூமியிலுள்ள ஆறு சூப்பர் ஹீரோக்கள் அடங்கிய குழுவான அவேஞ்சர்ஸ் ஐ உருவாக்க முனைகின்றார். இவரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட அவேஞ்சர்ஸ் குழுவைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.

லோக்கியின் அண்ணனும் இடிகளின் வல்லமையை ஈர்த்து எதிர்களைத் தாக்க வல்ல சக்தி படைத்த கோடாலியை உடையவனுமானவன் தோர். விசேசமான வல்லமையை ஊட்டக் கூடிய தசைகளைப் படைத்தவனும் சிறந்த போர்த் திட்டங்களைத் தீட்ட வல்லவனும் ஆனவன் கேப்டன் அமெரிக்கா. இவனின் ஆயுதம் எந்த சக்தியாலும் அழிக்க முடியாத வட்டமான போர்க் கவசம் ஆகும். இரும்புக் கவசங்களை உடையவனும் கணனித் திரையினால் எதிர்களைத் திட்டமிட்டு தாக்கக் கூடிய துவக்குகளை உடையவனும் ஆனவன்

'அயர்ன் மேன்.' எவராலும் எளிதில் அசைக்க முடியாத மிகப் பெரிய தசை வலிமையை உடையவனும் எதிரிகளைக் கொசுவைப் போல் அடித்து நாசம் செய்ய வல்லவனும் ஆனவன் ஹூல்க். மிகச் சிறந்த சண்டைப் பயிற்சியும் உளவுத் திறனும் பெற்ற பெண் பிளாக் விடோ. மிகச்சிறந்த வெடிக்கத்தக்க கூரையுடைய வில் அம்பு வீரன் ஹாவ்கேயி.

இவ்வீரர்கள் அனைவரும் இணைந்து மிக்க வலிமையுள்ள விண் கப்பல்கள் மற்றும் வாகனங்களையும் உடைய கவசம் தரித்த வேற்றுக் கிரக எதிரிகளை எதிர்த்து திறமையுடன் போராடும் விதம் மிக நேர்த்தியாகப் படம் பிடிக்கப் பட்டுள்ளது. அதிலும் படத்தின் இறுதிப் பாகம் சுமார் 40 நிமிடங்கள் ஆக்ஸன் காட்சிகள் இதுவரை எந்தத் திரைப்படத்திலும் இல்லாத அளவு மிக நூதனமாக அமைந்துள்ளது.

சில காட்சிகள் ட்ரான்ஸ்ஃபோமர்ஸ் திரைப் படத்தை நினைவூட்டினாலும் படத்தில் ரசிக்கத் தக்க அம்சங்கள் காமெடி உட்பட நிறைய உள்ளன. மொத்ததில் சிறுவர்கள் உட்பட பெரியவர்கள் வரை அனைவரும் கட்டாயமாக அதிலும் தியேட்டரில் போய்ப் பார்க்க வேண்டிய படம் 'தி அவேஞ்சர்ஸ்.'

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget