கோயம்பேடு பேருந்து நிலையம் சினிமா விமர்சனம்

தாதாவிடம் அடியாளாக வேலை பார்ப்பவர் அசோக். நண்பனை அவமானபடுத்திய அன்விதாவை காதலித்து பழிவாங்க முயற்சிக்கிறார். ஒரு கட்டத்தில் நிஜமாகவே காதலிக்க துவங்குகிறார். அன்விதாவும் விரும்புகிறார். அசோக் காதல் போலியானது என்று அப்பெண்ணிடம் நண்பன் பற்ற வைக்கிறான். அன்விதா வெறுப்பாகி அசோக்கை உதறிவிட்டு இன்னொருவனை மணக்கிறார். காதலியை தீர்த்துகட்ட கோயம்பேடு பஸ் நிலையம் வருகிறார் அசோக். 
எய்ட்ஸ் நோய் தாக்கிய பிறகும் மனைவியை ஆசைக்கு பலவந்தபடுத்துகிறான் ஒருவன். குழந்தைகளை காப்பாற்ற அவனை பிரிந்து மனைவி சென்னை வருகிறாள். அவளை போட்டு தள்ள கணவனும் அதே பஸ் நிலையம் வருகிறான். 

அரசியலில் முன்னேற ஜோதிடர் ஆலோசனைப்படி இளம்பெண்ணை பலாத்காரபடுத்தி சாகடிக்கும் அரசியல்வாதியும் அந்த பஸ் நிலையத்துக்கு வருகிறார். 

சிறுவர்களை கடத்தி கொத்தடிமையாக வைத்து வேலை வாங்கும் பெண், பணத்துக்காக குழந்தையை கடத்தி கொலை செய்யும் ரவுடி, அரசு அதிகாரியை தீர்த்து கட்ட துடிக்கும் தாதா போன்றோரும் அதே பஸ் நிலையத்துக்கு வருகின்றனர். அங்கு அனைவருக்கும் கிடைக்கும் தண்டனை அதிரடி கிளைமாக்ஸ்... 

பலதரப்பட்ட கிளைக் கதைகளை வெவ்வேறு உணர்வுகளில் விறுவிறுப்பாக துவங்கி ஒரே இடத்தில் முடித்துள்ள இயக்குனர் இரா. மணிவாசகன் கவனம் ஈர்க்கிறார். ரவுடியாக வந்து காதலில் விழுந்ததும் மென்மையாகி இறுதியில் காதலில் தோற்று புலம்பும் அசோக் கேரக்டரில் ஒன்றுகிறார்.

அன்விதா ரவுடிகளை போலீசில் சிக்க வைக்கும் தைரியமான பெண்ணாக கச்சிதம், எய்ட்ஸ் நோய் பாதித்த கணவன் கேரக்டரில் கொடூரம் காட்டுகிறார் இயக்குனர் மணிவாசகன். பெண் தாதா, உள்ளூர் ரவுடிகும்பல் தலைவர்கள் என அனைத்து கேரக்டர்களும் யதார்த்தம். 

திரைக்கதையை நேர்த்தியாக கோர்க்காததால் குழப்பம் ஏற்படுவது படத்துக்கு பின்னடைவு. கிளைமாக்ஸ் யூகிக்க முடியாத திகில். ரமேஷ் ராஜா இசை, புன்னகை வெங்கடேஷன் ஒளிப்பதிவு பக்கபலம்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget