சிவகார்த்திகேயன் நடிக்கும், "எதிர்நீச்சல் படத்தின் படப்பிடிப்பு, தற்போது சென்னையில் துவங்கியுள்ளது. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக, ப்ரியா ஆனந்தும், இன்னொரு கேரக்டரில் தன்சிகாவும் நடிப்பதாக இருந்தது. இப்போது, தன்சிகா வேடத்துக்கு, "அட்டகத்தி நந்திதா ஒப்பந்தமாகியுள்ளார். "அட்டகத்தி பாணியில் இதுவும் காமெடி கலந்த காதல் கதையில் உருவாகிறதாம். ஏற்கனவே, "3 படத்தில் காமெடியனாகவே நடித்த சிவகார்த்திகேயன், "இப்படத்தில் காமெடி கலந்த ஹீரோவாக புதிய கெட்டப்பில் நடிக்கிறார்.
"இப்படத்திற்கு பிறகு, நல்லதொரு ஜனரஞ்சகமான ஹீரோவாக ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொள்வர் என்கிறார், சிவகார்த்திகேயன்.