"வெண்ணிலா கபடிக் குழு, குள்ளநரிக் கூட்டம், துரோகி படங்களுக்கு இசை அமைத்த செல்வகணேஷ், தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். அவர், "போதை என்ற குறும்படத்தை இயக்கி உள்ளார். இதற்கு, அவரே இசையும் அமைத்துள்ளார் இதில், "காதல், பேராண்மை படங்களில் நடித்த சரண்யா, கதாநாயகியாக நடித்துள்ளார். போதைக்கு அடிமையாகும் இளைஞர்களின் வாழ்க்கையைச் பிரதிபலிக்கும் இந்தப் படத்தில், போதை இளைஞர்களை திருத்தி,
நல்ல பாதைக்கு மாற்றும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சரண்யா. இந்த கதாபாத்திரம், சரண்யாவுக்கு பெரிய சவாலாக இருந்ததாகவும், படப்பிடிப்பின் போது, உண்மையான "போதை இளைஞர்களை சந்தித்த சரண்யா, அந்த இளைஞர்களின் எதிர்காலம் பற்றி, மிகுந்த மன வேதனை அடைந்ததாகவும் கூறுகிறார், இயக்குனர் செல்வகணேஷ். விழிப்புணர்வு நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், சர்வதேச அளவில் நடக்கும் குறும்பட விழாவுக்கு செல்ல உள்ளது.