சிம்பு - வரலட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள போடா போடி படம் தீபாவளிக்கு வெளியாகத் தயாராகிறது. சரத்குமார் மகள் வரலட்சுமிக்கு இதுதான் முதல்படம். மிக நீண்ட நாள் தயாரிப்பிலிருந்த பெருமை கொண்ட, இந்தப் படம் இப்போதுதான் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் தீபாவளிக்கு விஜய் நடித்த துப்பாக்கி வெளியாகிறது. விஜய் படம் கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியாகும் சூழலில், சிம்பு தன் படத்தையும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் குறித்து சிம்பு கூறுகையில், "நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது படம் ஒன்று தீபாவளிக்கு வெளியாவது மகிழ்ச்சியாக உள்ளது," என்றார். படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவா கூறுகையில், "துப்பாக்கி மற்றும் போடா போடி இரண்டு படங்களின் தயாரிப்பாளருமே ஒருவர்தான். எனவே எங்களுக்குள் போட்டியில்லை. மக்கள் இரண்டையுமே விரும்பி ரசிப்பார்கள்," என்றார்.