சொந்த முயற்சி மற்றும் பணத்தின் மூலம் குறுகிய காலத்தில் தமிழ்த் திரையுலக ரசிகர்களிடையே பிரபலமானவர் ’பவர்ஸ்டார்’ டாக்டர் சீனிவாசன். பணமோசடி வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பவர்ஸ்டார் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பவர்ஸ்டார் சிறையில் இருந்த போது அவரது ரசிகர்கள் இது அவரது வளர்ச்சியை பிடிக்காதவர்கள் செய்த சதி என்று கூறி சமூக வளைதளங்களில் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். பவர்ஸ்டார் முக்கிய கேரக்டரில் நடித்துக்கொண்டிருந்த
ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் ’கண்ணா லட்டு திங்க ஆசையா’ படமும் முடங்கி போனது. அடுத்து என்ன செய்வது எனத் தெரியாமல் முடங்கியிருந்த படக்குழுவிற்கு நம்பிக்கையளிக்கும் விதத்தில் பவர்ஸ்டார் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். நிபந்தனைகளின் அடிப்படையில் தான் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். பவர்ஸ்டாரின் விடுதலையை தொடர்ந்து கண்ணா லட்டு திங்க ஆசையா படப்பிடிப்பு முழு வீச்சில் துவங்கப்பட்டுள்ளது(மறுபடியும் கைது செய்ய வாய்ப்பிருப்பதால்). இப்போது பவர்ஸ்டார் கண்ணா லட்டு திங்க ஆசையா படப்பிடிப்பில் லட்டு தின்றுகொண்டு இருக்கிறார்.