நாயகியாக, காதலியாக, தங்கையாகப் பார்த்துப் பழக்கப்பட்ட விஜயலட்சுமி அடுத்து வில்லியாக புது அவதாரம் எடுக்கிறார். இயக்குநர் அகத்தியனின் 2வது மகள்தான் விஜயலட்சுமி. சென்னை 600028 படத்தின் மூலம் நடிக்க வந்த இவர் முதல் படத்திலேயே ரசிகர்களைக் கவர்ந்தார். தொடர்ந்து அஞ்சாதே படத்தில் நல்ல ரோல் கிடைத்தது. அடுத்து ஜெய்யுடன் ஜோடியாக தனி நாயகியாக நடித்தார். இப்போது சுத்தமாக படம் இல்லாத நிலை. இந்தநிலையில்தான் அவர் வில்லியாக நடிக்கப் போகும் செய்தி வந்து சேர்ந்துள்ளது.
இயக்குநர் அமுதனின் இரண்டாவது படம் என்ற படத்தில் வில்லியாக நடிக்கிறாராம்.
ஏன் விஜி இப்படி திடீர்னு வில்லியானீங்க என்று கேட்டால் தனக்கே உரிய அழகுச் சிரிப்போடு, என்ன செய்வது, நானே கூட இதை எதிர்பார்க்கவில்லை. இந்தப் படத்தில் இரண்டு முக்கியமான பெண் கேரக்டர் வருகிறது. அதில் ஆதிரவாக வரும் பாத்திரத்தில் நான் நடிக்கிறேன். இது வில்லத்தனம் கொண்டது. இது எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும் என்று இயக்குநர் உறுதியாக கூறியதால் ஏற்றுக் கொண்டேன் என்றார்.
அத்தோடு நில்லாமல் அந்த கேரக்டரைக் கலக்கலாக செய்வதற்காக நிறைய ஹோம் ஒர்க்கும் செய்து வைத்துள்ளாராம்.