யாராவது டைரக்டர்கள் ஹன்சிகாவுக்கு போன் போட்டு, ராத்திரி -என்று வாயெடுத்தாலே போனை கட் பண்ணி விட்டு அலறிக்கொண்டு ஓடுகிறாராம். ஏன் அம்மணிக்கு ராத்திரி என்றால் அவ்வளவு பயமா? என்று விளக்கம் கேட்டால், ஆமாம், பகலில் இடைவிடாத படப்பிடிப்பு என்றாலும் தம் கட்டி நடித்துக்கொடுக்கும் ஹன்சிகா, ராத்திரி படப்பிடிப்பு என்று சொன்னால் மட்டும், கோடி ரூபாய் கொடுத்தாலும் ஸ்பாட்டுக்கு வர மாட்டேன் என்று மறுத்து விடுகிறாராம்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஹன்சிகாவைக்கேட்டால், ராத்திரி படப்பிடிப்பில் கலந்து கொள்வது இனிமையான அனுபவம்தான். ஆனால் என் மனசுக்கு பிடித்த அந்த விஷயம் எனது உடம்புக்கு பிடிக்கவில்லையே. இரண்டு நாட்கள் கண் தூங்காமல் நடித்தால் அடுத்த நாள் முகம் வீங்கி விடுகிறது. உடம்பில் எடைபோட்டு விடுகிறது. அடுத்த நாள் வேறு படத்தின் ஸ்பாட்டுக்கு சென்றால், ராத்திரியெல்லாம் மது அருந்தினீர்களா? என்று தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்கிறார்கள். அதனால்தான் ராத்திரி படப்பிடிப்பு என்றாலே எனக்கு அலர்ஜியாகி விட்டது என்கிறார் ஹன்சிகா.