5. கை
சென்ற வார இறுதியில் வெளியான கை முதல் மூன்று தினங்களில் 75,000 ரூபாய்களே வசூலித்துள்ளது. தயாரிப்பாளருக்கு நிச்சய நஷ்டத்தை படம் ஏற்படுத்தும் என்பதை இந்த வசூல் தெரிவிக்கிறது.
4. பீட்சா
இந்த வருடத்தின் நம்பிக்கைக்குரிய படங்களில் ஒன்றான பீட்சா சென்ற வார இறுதியில் 1.11 லட்சத்தையும், வார நாட்களில் 1.2 லட்சத்தையும் வசூலித்துள்ளது.
இதன் இதுவரையான சென்னை வசூல் 4.15 கோடிகள்.
3. அம்மாவின் கைப்பேசி
சென்ற வார இறுதியில் தங்கர்பச்சான் படம் 2 லட்சங்களை வசூலித்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் வசூல் 16.6 லட்சங்கள்.
2. போடா போடி
இந்த வாரமும் அதே இரண்டாவது இடத்தில் போடா போடி. சென்ற வார இறுதியில் 36.6 லட்சங்களையும், வார நாட்களில் 33.7 லட்சங்களையும் இப்படம் வசூலித்துள்ளது. இதுவரை இதன் வசூல் 2.09 கோடி.
1. துப்பாக்கி
அதே முதலிடத்தில் துப்பாக்கி. வார இறுதியில் 2.15 கோடியும், வார நாட்களில் 2.43 கோடியும் வசூலித்து சென்ற வாரத்தில் மட்டும் நான்கரை கோடிக்கு மேல் அறுவடை செய்துள்ளது. முதல் 13 தினங்களில் இதன் சென்னை வசூல் 9.4 கோடிகள். எந்திரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, தசாவதாரம், சிவாஜி படங்களுக்கு அடுத்த இடத்தை துப்பாக்கி பிடித்துள்ளது. இந்த வார முடிவில் இதில் இரண்டு படங்களையேனும் துப்பாக்கி பின்னுக்குத் தள்ளும் என்பதை உறுதியாகச் சொல்லலாம்.