Fantasy எனப்படும் மந்திர தந்திரங்கள் கலந்த நாவல் வகை இங்கே மேற்குலகில் பிரபல்யம். இப்போது, Lord of the Rings, Harry Potter பட வரிசைகளின் வெற்றிக்குப் பிறகு, இவ்வகையான கதைகள் திரையரங்குகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கியிருக்கின்றன. இவ்வாறான ஒரு படமே Inkheart ஆகும். படம் 12 வயது சிறுமி Maggie’ஐப் (Eliza Bennett) பின்தொடர்ந்து போகின்றது. தான் மூன்று வயதாக இருக்கும் போது தனது தாய் Resa (Sienna Guillory) தன்னை கைவிட்டுவிட்டு ஓடிப்போய் விட்டதாக நம்பிக் கொண்டிருக்கின்றாள் Maggie.
என்றாலும் உண்மை அதுவல்ல. Maggie’யின் அப்பா Mortimer’க்கு (Brenden Fraser) ஒரு அமானுக்ஷ்யமான சக்தியுண்டு. இவர் எந்த கதைப்புத்தகத்தை வாய்விட்டு வாசிக்கின்றாரோ அதில் இருக்கும் கதாபாத்திரங்கள், சம்பவங்கள் எல்லாம் நிஜத்திற்கு வந்து விடும் (என்ன “Bedtime Stories” ஞாபகம் வருகுதோ?) அதில் இன்னொரு அம்சம் என்னவென்றால் பல விடயங்கள் புத்தகத்திலிருந்து நிஜத்திற்கு வந்துவிட, நிஜத்திலிருக்கும் ஒரு மனிதர் புத்தகத்துக்குள் போய்விடுவார்! தனது சக்தியைப் பற்றி அறியாத Mortimer, மூன்றுவயதான Maggie’க்கு “Inkheart” எனும் புத்தகத்தை வாசிக்க, கதைப் புத்தகத்திலிருந்து Dustfinger (Paul Bettany) எனும் ஒரு நெருப்பு வித்தைக்காரனும், Capiricon (Andy Serkis) எனும் வில்லன் பாத்திரமொன்றும் இவ்வுலகத்திற்கு வந்து விடுகின்றனர். இவர்களிற்குப் பதிலாக Maggie’இன் அம்மா புத்தகத்தினுள் சென்று விடுகின்றார். Dustfinger புத்தகத்திலிருக்கும் தனது குடும்பத்துடன் திரும்ப இணையத் துடித்தாலும், புத்தகத்தினுள் திரும்பப்போக விருப்பமில்லாத Capricon, அந்தப் புத்தகத்தை பறித்துக்கொண்டு தலைமறைவாகிவிடுகின்றான். Resa’வை திரும்ப இவ்வுலகத்திற்கு கொண்டுவருவதற்கோ அந்தப் புத்தகம் வேண்டும். ஆனால் அந்தப் புத்தகமோ கிடைப்பதற்கு அரிய ஒரு பழைய புத்தகம். எனவே ஒன்பது ஆண்டுகளாக அந்தப் புத்தகத்தைதேடி உலகத்தின் மூலைமுடுக்களில் இருக்கும் பழைய புத்தகக்கடையெல்லாம் ஏறி இறங்கிக்கொண்டிருக்கின்றார் Mortimer. கூடவே உண்மையான காரணம் தெரியாத Maggie’யும்.
இவர்கள் புத்தகத்தைத் தேடிக்கொண்டிருக்க, இவர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள் Dustfinger’உம், Capricon’உம். குடும்பத்துடன் மீள இணைவதற்காக Dustfinger’உம், வேறு கதைப்புத்தகத்தகங்களிலிருந்து செல்வங்களை வரவழைப்பத்தற்காக Capricon’உம். இந்த இரு குழுவும், Maggie’ஐயும் தகப்பனாரையும் நெருங்க, Resa’வின் மாமியார் Elinor (Helen Mirren) வீட்டில் தஞ்சம் புகுகின்றனர் Maggie’யும் Mortmier’உம். கடைசியாக அதுவும் சரிவராது போக, குடும்பத்தோடு Capricon’இடன் அகப்படுகின்றனர். பிறகென்ன வழமையான சாகசங்கள், சில ஆச்சரியங்கள், நகைச்சுவைகள் எல்லாவத்தையும் கலந்து யாவரும் நலம் என்று கதையை முடிக்கின்றார்கள்.
அவ்வளவு பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும், படம் மிகவும் சாதாரணம். படத்தின் சில அம்சங்கள் புதிதாக, இரசிக்கக கூடியதாக இருக்கின்றது. special effects’உம் பரவாயில்லை. பொதுவாக தொய்வில்லாது, அலுப்படிக்காது படம் போகின்றது. என்றாலும் புதியது என்று பெரிதாக ஒன்றும் இல்லை. அண்மையில் வந்து நொடுங்கிப்போன “Eragon“, “Golden Compass” படங்களின் வரிசையில் இதையும் சேர்த்துவிடலாம். படத்தைப் பார்க்கும்போது, அதன் மூலமான புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்ற ஆவல் வருவது உண்மை. என்றாலும் அந்த நாவல்கள் ஜேர்மன் மொழியில் இருப்பது துரதிஸ்டம். படம் பொதுவாக சிறாருக்கான படம்தான். சும்மா நேரத்தைப் போக்காட்டுவதற்குப் பார்க்கலாம்.