பரதேசி படத்தின் நாயகி வேதிகா சிவப்பான பெண் தான் ஆனால் அழகான பெண் என்று கூறாதீர்கள் என்று இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார். மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா, வேதிகாவை வைத்து இயக்குனர் பாலா எடுத்துள்ள பரதேசி படம் வரும் டிசம்பர் 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்திற்கு பிறகு அத்ரவாவின் இமேஜ் கூடிவிடும் என்று கூறப்படுகிறது. பாலாவின் படங்களில் சிவப்பான நாயகிகளை மேக்கப் போட்டு கறுப்பாக காட்டுகிறார்கள்.
இது குறித்து பாலாவிடம் வேதிகா போன்ற சிவப்பான அழகான நாயகிகளைத் தேர்வு செய்து மேக்கப் போட்டு கறுப்பாக காட்டுகிறீர்களே. அதற்கு பதில் கறுப்பான ஒருவரை நாயகியாக நடிக்க வைக்கலாமே என்றதற்கு பாலா கூறுகையில்,
வேதிகாவை சிவப்பான பெண் என்று சொல்லுங்கள் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அழகான பெண் என்று சொல்லாதீர்கள் என்று தெரிவித்துவிட்டார். பாலா இவ்வாறு கூற வேதிகா என்ன செய்தார் என்று தெரியவில்லையே.
இது தவிர பாலாவின் படங்களில் ஹீரோக்களின் ஹேர்கட் பற்றியும் கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கப்படுகிறது. பாலாவின் ஹீரோக்களின் மண்டையை ஏன் இப்படி கரும்பிவிடுகிறார்கள் என்று பலர் தங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்கின்றனர்.