அவன் இவன் படத்தையடுத்து பாலா தயாரித்து இயக்கியுள்ள படம் பரதேசி. இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக வேதிகா நடித்துள்ளார். இன்னொரு நாயகியாக தன்சிகா நடித்திருககிறார். இப்படத்தில் நடித்தது பற்றி வேதிகா கூறும்போது, தமிழில் இதுவரை 6 படங்களில்தான் நடித்திருக்கிறேன். அதோடு என் நடிப்பு பேசப்படும் வகையில் எந்த படத்திலும் எனக்கு கேரக்டர்களும் கிடைத்ததில்லை. அதனால் பாலா சார் படமெல்லாம்
கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம் கிடைத்தபோது ரொம்ப சந்தோசமடைந்தேன். பரதேசி படப்பிடிப்பு எப்போது ஆரம்பிக்கும் என்று ஆவலோடு காத்திருந்தேன்.
முதல் நாள் அவர் காட்சிகளை விளக்கி நடிக்க வைத்தபோது, அவருடன் ஒர்க் பண்ணுவது புதுமையான அனுபவமாக தெரிந்தது. ஆனால் போகப்போக, சில காட்சிகளுக்கு அவர் எதிர்பார்த்தது மாதிரி என்னால் நடிக்க முடியவில்லை. அதனால் திரும்பத்திரும்ப அந்த காட்சியில் என்னை நடிக்க வைத்து பெண்டை நிமிர்த்தி விட்டார். அதுமட்டுமின்றி, எங்காவது ஒரு சின்ன தவறு செய்தாலும் கண்டு பிடித்து விடுவார். அதனால் பரதேசி படப்பிடிப்பு முடியுற வரை எனக்கு திக்கு திக்கென்றிருந்தது. ஆக, பாலா சார் ரொம்ப டேஞ்சரான ஆளு. அவருகிட்ட ரொம்ப கவனமாக வேலை செய்யனுங்கிறத நான் தெரிஞ்சிக்கிட்டேன் என்று பரதேசி பட திக் திக் அனுபவங்களை சொல்கிறார் வேதிகா.