நடிகர்கள்: வினய், சத்யன், பிரேம்ஜி, அரவிந்த், ஷாம்ஸ், லட்சுமிராம், மனோபாலா, சித்ரா லட்சுமணன், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார்,சோனா, மந்த்ரா,
இசை: கே
ஒளிப்பதிவு: பி.செல்லத்துரை
இயக்கம்: பி.டி.செல்வக்குமார்
தயாரிப்பு: எஸ்.சிவக்குமார், ஆர்.சிவக்குமார்
நண்பன், துப்பாக்கி ஆகிய படங்களின் கோவை, திருச்சி வினியோகஸ்தர்களான எஸ்.சிவக்குமார், ஆர்.சிவக்குமார் ஆகிய இருவரும் இணைந்து, ‘ஒன்பதுல குரு’ என்ற படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் வினய், சத்யன், பிரேம்ஜி, அரவிந்த், ஷாம்ஸ், லட்சுமிராம், மனோபாலா, சித்ரா லட்சுமணன், லொள்ளுசபா சாமிநாதன், சூப்பர்குட் லட்சுமணன், கிருஷ்ணமூர்த்தி, படவாகோபி, சாப்ளின் பாலு ஆகிய நகைச்சுவை நடிகர்கள் இணைந்து நடிக்கிறார்கள்.
இவர்களுடன் டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார்,சோனா, மந்த்ரா, கீதாசிங், ரூபாஸ்ரீ, பாய்ஸ் ராஜன் ஆகியோரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் ஜீவா நடிக்கிறார்.
ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் 4 நண்பர்களை பற்றிய கதை இது. நான்கு பேரும் நண்பர்களாக இருந்தாலும், ஒருவரின் வளர்ச்சி இன்னொருவருக்கு பிடிக்காது. நண்பனின் வளர்ச்சியை நண்பனே தடுக்க முயற்சிப்பதால் ஏற்படும் விளைவுகளை கதை நகைச்சுவையுடன் சித்தரிக்கிறது.
நா.முத்துக்குமார், மதன் கார்க்கி ஆகிய இருவரும் பாடல்களை எழுத, கே இசையமைக்கிறார். பி.செல்லத்துரை ஒளிப்பதிவு செய்கிறார். பி.டி.செல்வக்குமார் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நடைபெறுகிறது.