ஒரு பெண்ணை பார்த்ததும் நமக்குள் ஒரு கலவரம் நடக்கணும் - சிம்பு


தன்னுடன் படத்தில் ஜோடியாக நடிக்கும் நடிகையை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளுவது சிம்புவிற்கு வழக்கம். ஒரு படத்திற்கே அப்படியென்றால் ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் தன்னுடன் நடிக்கும் ஹன்ஸிகாவை விட்டுவைப்பாரா சிம்பு. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சிம்பு “ ஒரு பெண்ணை பார்த்ததும் நமக்குள் ஒரு கலவரம் நடக்கணும். திரும்ப திரும்ப பார்த்தாலும் மனதிற்கு சலித்துப்போகாமல் இருக்கவேண்டும். அப்படிப்பட்ட அம்சமான நடிகை தான் ஹன்ஸிகா மோத்வானி. ஹன்ஸிகாவின்
சினிமா வாழ்க்கையில் ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் சரிவர அமையாததால் அவர் ஜொலிக்கவில்லை.  ஆனால் தற்போது பல இளைஞர்களின் கனவுக்கன்னி ஹன்ஸிகா தான். 

நான் நடிக்கும் படங்களின் கதாநாயகி தேர்வில் நான் கொஞ்சம் கறாராக இருப்பேன். அந்த வகையில் எந்த வித சமரசமும் இல்லாமல் அவரது அழகை முன்வைத்து என் இரண்டு படங்களுக்கும் ஓகே சொன்னேன். ஹன்ஸிகாவின் ரசிகர்கள் அவரது கதாபாத்திரத்தோடு ஒன்றிவிடுவது படத்திற்கும் பிளஸ்ஸாக அமையும்” என்று கூறியிருக்கிறார். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget