எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கும் பலரது கவலை பேட்டரி. இது ஒரு பெரிய விஷயமா? வாங்கும்போது நீடித்து உழைக்கும் பேட்டரியினை வாங்கினால் போதும் என்று தோன்றும். ஆனால் அதிக தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்துவதால் எவ்வளவு சார்ஜ்செய்தாலும் போதவில்லை என்பது பலரது கவலையாக இருக்கிறது.
இதனால் பேட்டரியின் ஆற்றலை சேமிக்க என்ன வசதி என்பதை பார்க்கலாம்.
வைபை மற்றும் ப்ளுடூத் போன்ற வசதிகளை பயன்படுத்தி முடித்த பின்பு, இதை ஆப் செய்து வைத்துக் கொள்வது மிக சிறந்த ஒன்று. அதிக அப்ளிகேஷன்களை டவுண்லோடு செய்து கொள்வதையும் தவிர்க்க வேண்டும். சில புதிய அப்ளிகேஷன்கள் டவுண்லோடு செய்யும் போது அதிகம் பயன்படுத்தாத சில அப்ளிகேஷன்களை அகற்றுவது நல்லது. பொழுதுபோக்கிற்காக விளையாட்டுகளை கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தலாம். ஆனால் விளையாட்டு படங்கள் போன்றவற்றை பார்ப்பதற்காகவே அதிக நேரம் லேப்டாப்கள் பயன்படுத்துவதும் பேட்டரியை பாதிக்கும்.
எக்ஸ்டர்னல் மவுஸ் பயன்படுத்தாமல், லேப்டாப்பில் உள்ள மவுஸை பயன்படுத்துவது சிறந்தது. திரைக்கு அதிக வெளிச்சம் வைத்திருந்தால் அதை குறைக்கவும். இது பேட்டரிக்கும், கண்களுக்கும் சேர்த்து ஆபத்தை கொடுக்கும். தகவல்களை தெளிவாக பார்க்கக்கூடிய அளவு திரை வெளிச்சத்தினை சரியான அளவில் பயன்படுத்துவது கூட பேட்டரியின் ஆற்றலை அதிகப்படுத்த உதவும்.
லேப்டாப்பை ஆப் செய்யும் போது டர்ன் ஆப் ஆப்ஷனை பயன்படுத்துவது சிறந்தது. லேப்டாப் மானிட்டர் சரியாக ஆப் செய்யப்படாவிட்டால் இதன் மூலம் அதிக பேட்டரி வெளியேறும். ஸ்பீக்கர் வால்யூம் அதிகளவில் வைத்துக் கொள்வதை தவிர்க்கவும்.
எல்லோரும் செய்யும் முக்கியமான தவறு ஒன்றும் இருக்கிறது. லேப்டாப் சார்ஜரை ப்ளக்கில் போட்டுவிட்டு ஸ்விட்ச் ஆன் செய்த பிறகு அந்த சார்ஜர் ஒயரை லேப்டாப்பில் இணைப்பது மிகவும் தவறானது. இதனால் மின்சாரத்தின் நேரடி பாய்ச்சல் பேட்டரியை எளிதாக தாக்கும் ஆகவே லேப்டாப் சார்ஜரின் ஒயரை லேப்டாப்பிலும், ப்ளக்கிலும் இணைத்துவிட்டு அதன்பின் ஸ்விட்ச்சை ஆன் செய்வது சிறந்தது. இது போன்ற வழிமுறைகளை பயன்படுத்துவதால் லேப்டாப்பின் பேட்டரி ஆற்றலை எளிதாக சேமிக்க முடியும்.