திருத்தணி முருகன் பிலிம்ஸ் சார்பில் எம்.குமார் தயாரிக்கும் படம் ‘பூர்வகுடி’. இதில் நாயகனாக ஈஸ்வர், நாயகியாக மதுஸ்ரீ நடிக்கின்றனர். ‘கை’ தென்னவன், வெண்ணிலா கபடிகுழு ஜானகி, ரோஜாபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு திரைக்கதை எழுதி இப்ராஹிம் இயக்குகிறார். தமிழர்களின் பாரம்பரிய கலாசார விளையாட்டான ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. சர்ச்சைக்குரிய இவ்விளையாட்டின் மறுபக்கத்தையும் பாதிப்புக்குள்ளாகும் குடும்பத்தினரையும்
அதில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதும் திரைக் கதையாக்கப் பட்டுள்ளது.
பாசம், காதல், காமெடி போன்ற அனைத்து அம்சங்களும் படத்தில் இருக்கும் என்றார் இயக்குனர். இருபது லட்சம் ரூபாய் செலவில் செட் அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களை கொண்டு தேனியை சுற்றி படமாக்கப்பட்டுள்ளது. தேனி வட்டார வழக்கு மொழி படத்தில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. பாடல்கள் கேரளா, போடி, உத்தமபாளையம், அதிரப்பள்ளியில் படமாகி உள்ளது.
ஒளிப்பதிவு: அருண், இசை: புரூஸ், வசனம், பாடல்: தமிழ் மணவாளன், எடிட்டிங்: ராம், நடனம், கேசவ், ஸ்டண்ட்: மகேஷ்.