நீர்ப்பறவை நாயகி சுனைனா நீச்சல் உடை நாயகியாகப்போவதாக பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளார். இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று அவரைக் கேட்டபோது, இது ஒன்றும் திடீர் முடிவல்ல. ஏற்கனவே சில படங்களில் நீச்சல் உடை, குளியல் காட்சி என்றெல்லாம் நடித்திருக்கிறேன். ஆனால் நீர்ப்பறவை படத்துக்குப்பிறகு எனது சினிமா கேரியர் மாறும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அந்த படத்துக்குப்பிறகு இருக்கிற மவுசும் குறைந்துவிட்டது போல் உள்ளது.
அதனால் இன்றைக்கு தியேட்டர்களுக்கு வரும் இளவட்ட ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப, முழுநேர கிளாமர் ஹீரோயினாகும் முடிவுக்கு வந்துவிட்டேன். சமர் படத்துக்குப்பிறகு இனி நான்நடிக்கிற எல்லா படங்களுமே இளமை ததும்பும் விதத்தில்தான் இருக்கும் என்று சொல்லும் சுனைனா, திருத்தணி படத்தில்கூட பரத்துடன் குத்துப்பாட்டு நடிகைகளுக்கு இணையாக அதிரடி ஆட்டம் போட்டிருந்தேன். அதனால் இனி முன்னணி நடிகர்களுடன் குத்துப்பாட்டுக்கு ஆட வேண்டும் என்றாலும் தவிர்க்க மாட்டேன். மார்க்கெட்டில் பரபரப்பாக பேசப்பட என்னென்ன தொழில் யுக்திகளை கடைபிடிக்க வேண்டுமோ அதையெல்லாம் பின்பற்றப்போகிறேன் என்கிறார் சுனைனா.