சுந்தரபாண்டியன், கும்கி படங்களில் நடித்தவர் லட்சுமிமேனன். பெரும்பாலான கேரளத்து நடிகைகளுக்கு தமிழ் நல்ல எதிர்காலம் அமைவதைப்போன்று இவர் நடித்த முதல் இரண்டு படங்களுமே வெற்றி பெற்று இவரை பிரகாசப்படுத்தியிருக்கிறது. அதனால் தற்போது குட்டிப்புலி, மஞ்சப்பை என்ற படங்களில் கமிட்டாகியிருக்கிறார் லட்சுமிமேனன். ஆனால் இந்த படங்களில் சசிகுமார், விமல் போன்ற நடிகர்களுடன்தான் நடிக்கிறார்.
மேலும், இந்த படங்களிலும முந்தைய படங்களைப்போன்று வில்லேஜ் கெட்டப்பில்தான் நடிக்கிறாராம்.
இதுபற்றி லட்சுமிமேனன் கூறும்போது, சினிமாவில் நல்ல நடிகையாக வேண்டும் என்றுதான் வந்தேன். வந்தவேகத்தில் அதற்கேற்ற படங்கள் கிடைத்தன. அதனால் பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்ட் என்ற பெயரை பெற்று விட்டேன். அதேசமயம் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் மனதளவில் உள்ளது. ஆனால் விஜய், அஜீத், சூர்யா என்று முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்கிறபோது பாடல் காட்சிகளில் கிளாமராக நடிக்க வேண்டியிருக்கும். கூடவே முத்தக்காட்சி, அதிக நெருக்கம் என்றெல்லாம் காட்சி வைப்பார்கள். ஆனால் எனக்கு அது சரிப்பட்டு வராது. எல்லாத்துக்கும் ஒரு லிமிட் வைத்திருக்கிறேன்.
அதனால்தான் விஜய், அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்ற ஆசைகளை தள்ளி வைத்துவிட்டேன். எனக்கு செட்டாகிற மாதிரியான படங்களில் மட்டுமே நடிக்கும் முடிவில் இருக்கிறேன். சினிமாவில் கொஞ்ச காலம் நடித்தாலும் பெயர் சொல்லும் நடிகையாக இருந்து விட்டுப்போக வேண்டும் என்பதே எனது விருப்பம் என்கிறார் லட்சுமிமேனன்.