சாப்பிட்டதும் தவிர்க்க வேண்டிய செயல்கள்

இந்த உலகில் உடலில் வரும் நோய்களுக்கு பெரும் காரணம் கிருமிகள் என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் உடலில் நோய் வருவதற்கு நாம் தான் காரணம். ஆம், என்ன நம்பமுடியவில்லையா? உண்மை தான். எப்படியெனில், நாம் எந்த செயலை சரியாக முறையாக செய்கிறோம். யாருக்கும் எந்த செயலை எப்போது செய்ய வேண்டும் என்று தெரியவில்லை.
அவ்வாறு தெரியாததாலேயே, பல நோய்கள் உடலில் வந்து தங்கி, விளையாடிக் கொண்டிருக்கின்றன.

அது என்ன செயல்கள் என்று கேட்கலாம். உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறையில் தான் மாற்றங்கள் என்று நினைத்தால், தற்போது உண்ட பின்பு கூட செய்யும் செயல்களில் வரவர மாற்றங்கள் நிகழ்கின்றன. சிலர் அதிகமாக சாப்பிட்டு விட்டோம் என்று சாப்பிடப் பிறகு நடப்பது, சிகரெட் பிடிப்பது என்றெல்லாம் செய்வார்கள். இது மட்டுமின்றி, இதுபோன்று இன்னும் பல செயல்கள் இருக்கின்றன. அவை என்னவென்று படித்து தெரிந்து கொண்டு, அந்த செயல்களை இனிமேல் உண்ட பின்பு செய்யாமல், ஆரோக்கியமாக வாழ்வதற்கான வழிகளை பின்பற்றி வாழுங்கள்.

புகைப்பிடிப்பது

பெரும்பாலான ஆண்கள் சாப்பிட்டதும், ரிலாக்ஸ் செய்கிறேன் என்ற பெயரில் சிகரெட் பிடிப்பார்கள். அவ்வாறு சாப்பிட்டு முடித்ததும் ஒரு சிகரெட் பிடித்தால், அது 10 சிகரெட் பிடித்ததற்கு சமம் என்று ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலானது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

பழங்களை சாப்பிடுவது

உணவை குறைவாக சாப்பிட வேண்டும் என்று சாப்பிடுவதற்கு முன் பழங்களை சாப்பிடுவோம். ஆனால் உணவு உண்ட பின்பு உடனே பழங்களை சாப்பிட்டால், வயிற்றில் காற்றானது நிறைந்து, மிகுந்த உப்புசத்திற்கு ஆளாக்கிவிடும். எனவே பழங்களை சாப்பிட வேண்டுமெனில், உண்ட பிறகு 1-2 மணிநேரத்திற்கு பின்னர் சாப்பிட வேண்டும். அதுவே உணவுக்கு முன் என்றால், 1 மணிநேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.

டீ குடிப்பது

சிலர் உணவுக்குப் பின் டீ குடிப்பார்கள். ஆனால் அவ்வாறு குடிப்பது தவறு. ஏனெனில் டீயில் அமிலங்கள் அளவுக்கு அதிகமாக இருக்கும். எனவே அப்போது உணவில் உள்ள புரோட்டீனானது, அளவிக்கு அதிகமாகி, பின் செரிமானமடையாமல் வயிற்றில் சிரமத்தை ஏற்படுத்தும்.

பெல்ட்டை கழற்றி வைப்பது

உணவு உண்ட பின்பு, வயிறு இறுக்குவது போல் உள்ளது என்று சிலர் பெல்ட்டை கழற்றுதல் அல்லது தளர்த்துதல் என்று செய்வார்கள். இவ்வாறு உடனே கழற்றி வைத்தால், குடலானது சில நேரங்களில் திசை திரும்பி, அடைப்பு கூட ஏற்படும்.

குளிப்பது

உண்டவுடன் குளிப்பது என்பது ஒரு தவறான பழக்கம். ஏனெனில் இந்த செயலால் இரத்த ஓட்டமானது சீராக கைகள், கால்கள் மற்றும் இதர உறுப்புகளுக்குச் செல்லுமே தவிர, வயிற்றில் இரத்தமானது இல்லாமல் பலவீனமடைந்து செரிமானத்தின் இயக்கமானது பாதிக்கப்பட்டு, உணவு செரிமானமடையாமல் இருக்கும்.

நடப்பது

பொதுவாக மக்கள் உணவை உண்டப் பின் சிறிது தூரம் நடந்தால், 99 வயது வரை வாழலாம் என்று நினைக்கின்றனர். உண்மையில் அது தவறான கருத்து. அவ்வாறு நடக்கும் போது ஏற்படும் செரிமானமானது, உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சாமல் முற்றிலும் வெளியேற்றிவிடும்.

தூங்குவது

சாப்பிட்டதும் தூங்கினால், உணவானது சரியாக செரிமானமடையாமல் இருக்கும். மேலும் இந்த செயலால், வாயுத் தொல்லை மற்றும் குடலில் ஏதேனும் தொற்றுநோய் வந்து, பின் வயிற்றில் பிரச்சனை ஏற்படும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget