ஷாருக் கான், சல்மான் கான், ஆமிர்கான், சைப் அலி கான் என பார்த்துச் சலித்துப் போன பாலிவுட் உள்ளங்களில் பால் பாயாசம் வார்ப்பது போல வந்து சேர்ந்துள்ளார் இன்னொரு கான் - பயப்படாதீங்க, இவர் ஆண் அல்ல, ஒரு பெண், பெயர் சாய்ரா கான்! பாலிவுட்டில் நீண்ட காலமாக கொடி கட்டிப் பறப்பது ஷாருக், சல்மான் மற்றும் ஆமிர்தான். மாறி மாறி இவர்கள் ஹிட் படங்களைக் கொடுப்பதாலும், டிரென்ட்செட்டர்களாக இருப்பதுமே இவர்களது வெற்றியின் உச்சத்திற்கு முக்கியக் காரணம். இவர்களின் வரிசையில் வெற்றிக்கொடியைப் பறக்க
விட்ப் போவதாக கூறியுள்ளார் புதிதாக களம் புகுந்துள்ள சாய்ரா கான்.
துபாய் 'இளவரசி'
துபாயிலிருந்து வந்தவர்தான் இந்த சாய்ராகான். இவரை இவரது சகாக்கள் துபாய் இளவரசி என்றுதான் அழைக்கின்றனர். அப்படி ஒரு அழகும், அட்டகாச கவர்ச்சியும் இவரிடம் கொட்டிக் கிடக்கிறது.
தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ்
சதீஷ் ரெட்டி தயாரிக்க, ஹாரூன் ரஷீத் ரொம்ப நாட்களாக இயக்கி வரும் தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில்தான் சாய்ரா கானும் தலை காட்டுகிறாராம்.
அட்டகாச லுக் ..
சாய்ராகான் படு அழகாக மட்டுமல்லாமல், கவர்ச்சிக்கேற்ற உடல் வாகுடனும் இருப்பதாக சதீஷ் ரெட்டி கூறுகிறார். மேலும் பாலிவுட்டைக் கலக்கத் தேவையான அத்தனை அம்சங்களும் அவரிடம் நிரம்பியிருப்பதாகவும் பெருமையாக கூறுகிறார்.
கிரேட் ஸ்டார்ட்...
சாய்ரா பெருமிதம் தனது பாலிவுட் பாய்ச்சல் குறித்து சாய்ரா கூறுகையில், இது எனக்கு கிரேட்டான ஸ்டார்ட். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது, திரில்லாக இருக்கிறது. கின்னஸ் சாதனை படைக்கப் போகும் படத்தில் நானும் இருக்கிறேன் என்பது பெருமை தருகிறது.
கான்களை ஓரம் கட்டுவேன்
கான்களின் பிடியில் இருப்பது பாலிவுட். அதில் எனது கொடியையும் பறக்க விடுவேன்.சல்மான் கான், ஷாருக் கான், ஆமிர்கானை ஓரம் கட்டுவேன்.. என்றார் சாய்ரா.