Max Payne சினிமா விமர்சனம்

Max Payne ஒரு முன்னாள் துப்பறிவாளர். இவரது மனைவியும், கைக்குழந்தையும் வீடுடைப்பு கொள்ளையின் முடிவில் கொலை செய்யப்படுகின்றனர். கொலையாளிக் கும்பலில் இருவரை இவர் பதிலுக்கு கொலை செய்யமுடிந்தாலும், ஒருவன் தப்பியோடிவிடுகின்றான். அவனைக் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட காவல்துறை அந்த வழக்கை தீர்க்க முடியாத கேஸ் ஆக தூக்கிப் போட்டுவிட்டு மறந்துவிடுகின்றது. என்றாலும் அதை மறக்க Max Payneஆல் முடியவில்லை. துப்பறியும் பணியிலிருந்து தீர்க்கமுடியாத
கேஸ்களின் கோப்புக் காப்பாளராக தன்னைத்தானே பதவியிறக்கம் செய்து கொண்டு தனது குடும்பத்தின் கொலைவழக்கை தீர்ப்பதே ஒரே குறிக்கோளாக மாற்றிச் செயற்படுகின்றார். சில வருடங்கள் கழித்து கிடைக்கும் ஒரு சிறு தடையத்தை வைத்து துப்பு துலக்க முயலும் Max, தனது குடும்பத்தின் படுகொலைக்குப் பின்னால் எதிர்பார்த்ததிலும் பார்க்க பெரிய மர்மம் இருக்கின்றது என்பதை உணர்கின்றார். அத்தோடு அந்த கொலைகளின் பின்னணியில் இருப்பவர்களை கோலிவுட் ரகமாக பழிவாங்குவது மிச்சக்கதை.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget