டெர்மினேட்டர் பிரிடேட்டர், டோட்டல் ரீகால் என தொடர்ந்து 38 படங்களில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றவர் அர்னால்டு ஸ்வார்ஸ் நேகர். இவர் நடித்த ‘திலாஸ்ட் ஸ்டாண்ட்’ ஹாலிவுட் படம் தமிழ் உள்பட நான்கு இந்திய மொழிகளில் வெளியாகிறது. முழு நீள ஆக்ஷன் படமாக இதனை எடுத்துள்ளனர். அர்னாலுடன் ஜானி நாக்ஸ் வில்லி லூயிஸ் கஸ்மேஷ், ஜேமி அலெக்சாண்டர் போன்றோரும் நடித்துள்ளனர். கிம்ஜிவூன் இயக்கியுள்ளார். போதை மருந்து
கடத்தும் கும்பலின் அட்டகாசங்களும் கார்துரத்தல் காட்சிகளும் இதுவரை பார்க்காத விறு விறுப்புடன் இருக்கும் என்கிறார் இயக்குனர்.
பாதுகாப்பு துறை பணியில் இருந்து விடுபட்டு வேறு சூழ்நிலையில் வாழும் அர்னால்டை அவரது கூட்டாளியின் இழப்பு மாற்றுகிறது. இதனால் அவர் எடுக்கும் விஸ்வரூபமே படத்தின் மையக்கரு. வருகிற 18-ந்தேதி தமிழகம் முழுவதும் ஏ.வி.மோகன் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிடுகிறது.