விஸ்வரூபம் விவகாரத்தில் முதல்முறையாக வாய்திறந்துள்ளார் நடிகர் விஜய். விஸ்வரூபம் படப் பிரச்சினை தீரும் வரை தன் புதிய பட வேலைகளைத் தொடங்கமாட்டாராம் விஜய். விஸ்வரூபம் விவகாரம் கடந்த 20 நாட்களாக பெரும் பிரச்சினையாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்போதெல்லாம் விஜய் அமைதியாகவே இருந்தார். இந்தப் படத்துக்கு தடை, தடைக்குத் தடை, அதற்கும் ஒரு தடை என பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது.
ஆனால் அப்போதும் விஜய் அமைதியாக இருந்துவிட்டார். ஏற்கெனவே அரசியல் ஆர்வத்தில் அவரும் அவரது தந்தையும் செய்யும் செயல்களால் ஆட்சி மேலிடத்தின் கோபப் பார்வைக்கு ஆளாகி இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்த நேரத்தில் கமல் பிரச்சினையில் தலையிடுவது ஆபத்து என அமைதி காத்தனர். ஆனால் கமல் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகக் கூறியதும், விஜய் வாய்திறந்துவிட்டார். கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படப் பிரச்சினை தீரும் வரை ஏஎல் விஜய் இயக்கும் தன்னுடைய புதிய படமான தலைவா பணிகளைத் தொடங்கப் போவதில்லை என்று அவர் அறிவித்துள்ளார். கமல் ஹாஸன் தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.