ஏர்செல் நிறுவனம் புதிதாக சிறப்புச்சலுகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி 30 நாட்களுக்கு, தினமும் 3 மணிநேரம் இலவச 3ஜி இன்டர்நெட் சேவையை அனுபவிக்கலாம். இதை 'மார்னிங் ஸ்கீம்' என அழைக்கும் ஏர்செல், தினமும் 3 மணிநேரம் அளவில்லா 3ஜி இன்டர்நெடையே இலவசமாக தரப்போவதாக அறிவித்துள்ளது. இந்த சேவையை நீங்கள் பெற்றால், தினமும் அதிகாலை
6 மணி முதல் 9 மணிவரை பயன்படுத்தலாம். அதுவும் அன்லிமிடெட்!
இந்த சேவையைப் பெற நீங்கள் ஏர்செல் பயனாளராக இருந்து, *122*456# என்ற எண்ணுக்கு கால் செய்யவேண்டும். தகவல்கள் கிடைக்கும். இதனால் அதிவேகமான இன்டர்நெட் வசதியை பெறலாமென்றாலும் கட்டணங்கள் தாறுமாறாக இருப்பதாகவே பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த சேவைக்கான கட்டணங்கள் ரூ.7ல் ஆரம்பித்து ரூ.977 வரை என்று கூறப்பட்டுள்ளது!