கண்ணா லட்டு தின்ன ஆசையாவைத் தொடர்ந்து பவர்ஸ்டார் நடித்து வரும் இன்னொரு முக்கியமான படம் சும்மா நச்சுன்னு இருக்கு. இந்த படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கி வருகிறார். இப்படத்திலும் 4 ஹீரோக்கள் ஒரு பெண்ணுக்காக ரூட் போடும் கதைதானாம். ஆனால், இதுவரை யாருமே சொல்லாத புதுமையான கதை டிராவலாம். அதிலும், தற்போது பவர்ஸ்டாரின் மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால்
அவருக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்களாம். குறிப்பாக, அவருக்கான விக்கே ரொம்ப வித்தியாசமானதாம். தலையில் வைத்தால் ஒரு எகிறு எகிறிவிட்டு பின்னர் தலையில் உட்கார்ந்து கொள்ளுமாம். இப்படி ஒவ்வொரு விசயத்தையும் பாத்து பாத்து செய்திருக்கிறாராம் வெங்கடேஷ்.
இந்த படத்திற்காக சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்கள். ஆனால் அனைவரும் முன்கூட்டிய ஆஜராகி விட, பவர் மட்டும் மிஸ்ஸிங். ஏதாவது படப்பிடிப்பில் மாட்டிக்கொண்டாரோ என்று அனைவரும் நினைத்துககொண்டிருக்க, திடீரென்று என்ட்ரி ஆனார் மனிதர். வர்ற வழியில கார் பஞ்சர் ஆயிடுச்சு. அதான் என்னால பிரஸ்மீட் லேட்டாகிடக்கூடாதேன்னு ஆட்டோ பிடிச்சு வந்தேன் என்றார். அதோடு, என்னை எப்படியோ ரசிகர்கள் பாத்துட்டாங்க அதனால நிறையபேர் பின்னாடியே பைக்குல துரத்துனாங்க என்றும் சொன்ன பவர், எங்கிட்ட அப்படி என்னதான் இருக்குதுன்னு தெரியலையே. ஒரே படத்துல இவ்வளவு ரசிகர்கள் கிடைச்சிருக்கிறத பார்க்கும்போது, ரொம்ப சந்தோசமாக இருக்கு என்றும் சொல்லி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் பவர்ஸ்டார்.