Battle Ships 2 - ஆன்லைன் கணினி விளையாட்டு

ஒரு போரில் வெற்றி பெறுவது என்பது மிக எளிதல்ல.அதற்கு மிகவும் முக்கியமானது ஒரு சிறந்த போர் வியூகம் அமைப்பது ஆகும். Battle Ships 2 என்ற இந்த விளையாட்டு ஒரு சரியான போர் வியூகம் அமைத்து எதிரிகளை வீழ்த்துவதே ஆகும். உங்களிடம் மொத்தம் ஐந்து போர் கப்பல்கள் உள்ளது.அவற்றை தங்கலுக்கு என்று ஒதுக்கப்பட்ட பகுதிக்குல் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தி கொள்ளலாம்.

முதலில் mouseஆல் ஒரு கப்பலை கிளிக் செய்து தெரிவு செய்து கொள்ள வேண்டும்.பிறகு அந்த கப்பலை எங்கு நிறுத்த நினைக்கிறீர்களோ அந்த இடத்தில் mouseஆல் கிளிக் செய்ய வேண்டும்.

கப்பலை இடது அல்லது வலது பக்கமாக திருப்ப left,right arrow keysகள் பயன்படும்.இவ்வாறு எல்லா கப்பல்களையும் நிறுத்த வேண்டும்.

இதே போல் எதிராளியும் அவர்களுடைய கப்பல்களையும் நிறுத்துவார்கள்.ஆனால் அந்த கப்பல்கள் எல்லாம் எங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று நமக்கு தெரியாது. அதே போல் நம்முடைய கப்பல்கள் எங்கு உள்ளது என்று எதிராளிக்கும் தெரியாது.

பிறகு எதிராளியை தாக்க வேண்டும்.இதற்கு எதிராளியின் பகுதிற்குல் ஏதாவது ஒரு இடத்தில் கிளிக் செய்யவேண்டும்.அந்த இடத்தில் எதிராளியின் கப்பல் இருக்கும் பட்சத்தில் அது வெடிக்கும்.

இவ்வாறு எதிராளியும் நம்மீது தாக்குவார்கள்.எதிராளி நமது கப்பல்களை எல்லாம் தகர்த்து அளிப்பதற்குல் நாம் அவர்கலுடைய கப்பல்களை எல்லாம் அளிக்க வேண்டும். இதுவே இந்த விளையாட்டு.

பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget