லாஸ் ஏஞ்சல்ஸ் 2013ம் ஆண்டின் 85வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. லாஸ் ஏஞ்சல்சின் ஹாலிவுட் நகரில் நடைபெறும் இவ்விழாவில் உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்த திரையுல கலைஞர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் இந்தியாவின் புதுச்சேரியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்ட லைப் ஆஃப் பை படம் 5 விருதுகளை பெற்றுள்ளது. இப்படம் 11 பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
விருதுகள் விபரம் :
சிறந்த துணை நடிகர் : கிறிஸ்டோபர் வாட்ஸ்
சிறந்த அனிமேஷன் குறும்படம் : பேப்பர் மேன்
சிறந்த அனிமேஷன் படம் : பிரேவ்
சிறந்த ஒளிப்பதிவு : லைப் ஆஃப் பை
சிறந்த விசுவல் எபைக்ட்ஸ் : லைப் ஆஃப் பை
சிறந்த ஒளிப்பதிவாளர் : கிளாடியோ மிராண்டோ (லைப் ஆஃப் பை)
சிறந்த ஆடை வடிவமைப்பு:அன்னா கரீனினா
சிறந்த மேக் ஆப் : லிசா வெஸ்ட்கோட்
சிறந்த சிகை அலங்காரம் : ஜூலி டார்ட்னெல்
சிறந்த நேரடி ஆக்ஷன் குறும்படம் : கர்ஃப்யூ
சிறந்த ஆவண குறும்படம் : இனோசென்ட்
சிறந்த குறும்படம் : சர்ச்சிங் ஃபார் சுகர் மேன்
சிறந்த வேற்று மொழி படம் : அமோர்
சிறந்த சவுண்ட் மிக்சிங் : லேஸ் மிசெரபில்ஸ் படம்
சிறந்த சவுண்ட் எடிட்டிங் : ஜீரோ டார்க் தர்ட்டி மற்றும் ஸ்கை ஃபால் படங்கள்
சிறந்த துணை நடிகை : அன்னா ஹாத்வே
சிறந்த திரைப்பட எடிட்டிங் : அர்கோ
சிறந்த புரோடெக்ஷன் டிசைன் : லிங்கன்
சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் : லைப் ஆஃப் பை
சிறந்த ஒரிஜினல் பாடல் : அடிலி (ஸ்கைஃபால்)
சிறந்த தழுவல் திரைக்கதை : கிறிஸ் டேரியோ(அர்கோ)
சிறந்த ஒரிஜினல் திரைக்கதை : குயின்டின் டரன்டியோ
சிறந்த டைரக்டர் : ஆங் லீ(லைப் ஆஃப் பை)
சிறந்த நடிகை : ஜெனிஃபர் லாரன்ஸ்
சிறந்த நடிகர் : டேனியல் டே லீவிஸ்(லிங்கன்)
சிறந்த திரைப்படம் : அர்கோ