பல ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது மனிதனின் தோற்றத்திற்கு முதல் நடக்கும் யுத்தத்தில் டைட்டன்கள் எனப்படுவோர் சியோசிடம் தோற்கின்றனராம். இதன் பின்னர் ஆட்சியேறும் நபர்களே கிரேக்க கடவுகள்களான சியஸ், சைடன், ஹைடஸ். இவர்களில் சியஸ் மனிதர்களை உருவாக்கித் தொலைக்கின்றாராம்.
பின்னர் ஒரு நாள் ஒரு மீனவன் மிதந்து வரும் ஒரு பேளையை காண்கின்றான். அதை திறக்கும் போது அங்கே நம் நாயகன் பேர்சியஸ் இருக்கின்றார். தனது இறந்த தாயின் மேல் இருக்கும் பெர்சியசை அந்த மீனவன் காப்பாற்றி தன் மகன் போல பேணிப் பாதுகாக்கின்றான்.
இதே வேளை மனிதர்கள் கடவுள் மேல் கோவம் கொண்டு கடவுளுடன் யுத்தப் பிரகடனம் செய்கின்றனர்.
நரகத்தை ஆண்டுவரும் ஹைடஸ் சியசின் அனுமதி பெற்று மனிதர்களைத் தாக்கத் தொடங்குகின்றார். இதில் உச்ச கட்டமாக கிரக்கன் எனும் விலங்கையும் பாவிக்கின்றான். கிரக்கன் எனும் இந்த விலங்கை வைத்தே டைட்டன்களுடனான யுத்தமும் வெல்லப் பட்டது என்பதும் குறிப்பிட்டாக வேண்டும். அது சரி இந்த கிரக்கனை பைரேட்ஸ் ஒப் த கரிபியனிலும் பார்த்தோம் தானே அப்புறம் விதியின் வசத்தான் மனிதர்களால் நம் நாயகன் தேர்ந்தெடுக்கப் பட்டு ஹடைசை அழிக்கப் புறப்படுகின்றார். முக்கியமான பல தகவல்களை இங்கே நான் சொல்லவில்லை. அனைத்தையும் திரையில் காணுங்கள் அல்லது டிவிடியில் காணுங்கள்.
ஏற்கனவே திரைப்படத்தில் சரக்கு கம்மி இதில் நானும் உளறிவிட்டால்
நிச்சயமாக அதி மொக்கைப் படம் இல்லை. ஆனால் எதிர்பார்ரதளவிற்கு இல்லை. இதைவிட 1981ல் வெளியான திரைப்படம் சிறப்பாக இருக்கின்றது என்று பழைய சினிமா இரசிகர்கள் அங்கலாய்த்துக் கொள்கின்றார்கள்.
காட்சியமைப்புகள், சத்தவமைப்புகள் சிறப்பாக உள்ளன. அவையே திரைப்படத்தின் நம்பிக்கைக் தூண்களாக இருக்கின்றன