முத்தத்தில் கின்னஸ் சாதனை படைத்த வீணா மாலிக்


நிர்வாண போஸ், கையில் பாகிஸ்தானின் உளவு அமைப்பு முத்திரை என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பாகிஸ்தானின் கவர்ச்சி புயல் வீணா மாலிக், தற்போது பாலிவுட்டில் முகாமிட்டு தனது கவர்ச்சி மழையை பொழிந்து கொண்டு இருக்கிறார். இவர் இப்போது தி சிட்டி தேட் நெவர் ஸ்லீப்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். வீணா மாலிக்கிற்கு நேற்று 29வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாட நினைத்தார்.
அதன்படி தனக்கு நிமிடத்தில் 100 முத்தங்கள் கொடுத்து கின்னஸ் சாதனை படைக்க எண்ணி, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். 

இந்நிலையில் நேற்று தனது 29வது பிறந்தநாளை ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாடினார் வீணா. முத்தம் என்றதும் வீணாவின் கன்னத்திலோ அல்லது உதட்டிலோ முத்தம் கொடுக்கலாம் என்று எண்ணி ரசிகர்கள் குவிந்தனர். ஆனால் வீணாவோ கையை நீட்டி முத்தம் கொடுக்க சொன்னார். இருந்தும் ரசிகர்கள் முண்டி அடித்து கொண்ட நிமிடத்தில் 100க்கும் மேற்பட்ட முத்தத்தை மழையாக பொழிந்து தள்ளிவிட்டனர். கொஞ்சமும் கூச்சப்படாத வீணா, ரசிகர்களின் முத்தத்தை ரசித்து பெற்றுக்கொண்டார். இதன்மூலம் சல்மானின் கின்னஸ் சாதனையையும் முறியடித்துள்ளார். இதற்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் சல்மானுக்கு, குழந்தைகள் ஒருநிமிடத்தில் 108 முத்தங்கள் கொடுத்த‌தே சாதனையாக இருந்தது. ஆனால் வீணாவிற்கோ ரசிகர்கள் ஒரு நிமிடத்தில் 137 முத்தங்கள் கொடுத்து புதிய கின்னஸ் சாதனை படைத்துவிட்டனர். 

தனது பிறந்தநாளில் கின்னஸ் சாதனை படைத்தது வீணா மாலிக்கை ரொம்பவே மகிழ்ச்சியாக்கியுள்ளது. இதுகுறித்து வீணா கூறும்போது, படத்திற்காக இதை பப்ளிசிட்டி பண்ணுகிறேன் என்று சிலர் கூறுகின்றனர். நிச்சயமாக நான் ஒரு நடிகை, ஒரு படத்திற்கு பப்ளிசிட்டி ரொம்ப முக்கியம், என் படத்தை பப்ளிசிட்டி பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன், அதற்கு இதுவும் ஒரு வழி என்றார். 

எப்படியெல்லாம் கின்னஸ் சாதனை படைக்கிறார்கள்....!!

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget