குங்பூ பான்டா ஹாலிவுட் சினிமா விமர்சனம்

குங்பூவை ஏதாவது ஒரு மிருகத்துடன் பொருத்தி பார்க்க விரும்பினால், நீங்கள் எந்த மிருகத்தை தெரிவு செய்வீர்கள்? – நிச்சயமாக தின்று தின்று வண்டி வைத்த ஒரு பன்டா கரடியை அல்ல, சரிதானே? இந்த காட்டூன் படத்தில் அதைத்தான் தெரிவு செய்திருக்கிறார்கள் – விளைவு? கதைக்கமுதலே சிரிக்க வைக்கிற ஒரு கதாபாத்திரம். அதற்காக கதைவசனமே இல்லை என்றோ, அது சிரிப்பை வரவளைக்கவில்லை என்பதோஇல்லை.
படம் 1 1/2 மணி நேரமும் வயிறு குலுங்க வைக்கிறது.

படத்தின் மூலக்கதை என்னவோ பெரிதாகப் புதிதில்லை – குங்பூவுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு குண்டு பன்டா கரடியொன்று குங்பூ வல்லுணராக வருவதாகப் பகற் கனவு காண்கின்றது. இதே நேரத்தில் ஒரு கெட்ட குங்பூ வல்லுணரான பனிச்சிறுத்தையொன்று சிறை உடைப்புச் செய்கிறது. அதை தடுத்து நிறுத்த ஒரு வீரனைத்தெரிவு செய்ய வேண்டிய தருணத்தில் எமது பன்டா கரடி தவறுதலாக நுழைந்ததில் அது அந்த வீரனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுவிடுகிறது. அது குங்பூ வல்லுணராக மாறியதா, அந்த பனிச்சிறுத்தையை தடுத்து நிறுத்தியதா என்பதே படம்.

நீங்கள் நிறையக் காட்டூன் படங்கள் பார்ப்பவரானால், இந்தப்படத்தின் திரையோட்டம் பெரிய விசேடமாகத் தெரியப்போவதில்லை. என்றாலும் வாய் நிறைய சிரிக்க வைக்கவும் இந்தத்திரைப்படம் தவறவில்லை. பன்டாவுக்கு குரல் கொடுத்த ஜக் பிளக்கை எனக்கு பொதுவாகாப் பிடிப்பதில்லை; ஆனால் இந்தப்படத்தில் அவரைத்தவிர வேறு யாரும் இந்தக் கரடிக்கு இவ்வளவு  உயிரூட்டியிருக்க முடியாது!

சந்தோஷமான 92 நிமிடங்கள்; நிச்சையமாக  ஒரு குடும்பத்திற்கான நகைச்சுவை. பத்துவயது சிறுவர்கள் இந்த பன்டா கரடியோடு காதலில் விழுவார்கள்!

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget