Miss Pettigrew Lives for a Day ஹாலிவுட் சினிமா விமர்சனம்


1939, இரண்டாம் உலகப்போரின் வாயிற்படியில் நிற்கின்றது London. Miss Pettigrew (Frances McDormand) ஒரு நடுத்தர வயதடைந்த, ஒண்டிக்கட்டையான governess – ஒரு குடும்பத்தின் தேவைகளை மேற்பார்வை செய்யும் வேலை (சாதாரண வேலைக்காரியின் வேலையைவிட சற்றே உயர்ந்த பதவி). ஒரு பாதிரியாரால் வளர்க்கப்பட்ட இவர் சாதாரண மக்களின் நெறிகெட்ட வாழ்க்கைகளை ஏற்பதாக இல்லை.
தனது கண்ணியங்களை தனது எஜமானர்கள்மீது திணிக்கமுற்படுவதால் இவரை வேலைக்கு எடுக்க எவரும் தயாராக இல்லை. வேலையில்லை, வீடில்லை, சாப்பிடுவதற்கு காசில்லை என்ற நிலையில், புதியவொரு governess வேலையை ‘களவெடுத்துக்கொண்டு’ Delysiaவிடம் வந்து சேருகின்றார் Pettigrew. இளமையின் உச்சக்கட்டத்தில் இருக்கும் வெகுளியான Delysia (Amy Adams) தனது அழகைக் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற முயன்றுகொண்டிருக்கிறாள். சொகுசான வாழ்க்கைகாக உண்மைக் காதலை விட்டுக்கொடுக்க தயாராகவிருக்கும் Delysia, சொகுசான வாழ்க்கை, உண்மைக் காதல் இரண்டையும் இழந்து நின்றாலும், இழந்த தனது உண்மைக்காதலை எண்ணி அதிகம் கவலைப்படும் Pettrigrew – இவர்கள் இருவரும் ஒன்றாக செலவழிக்கும் ஒரு நாளில் எவ்வாறு ஒருவர் வாழ்க்கையை மற்றவர் பாதிக்கின்றார் என்பது கதை.

ஆர்ப்பாட்டமில்லாத ஒரு திரைப்படம். மூலக்கதை அவ்வளவு புதிது இல்லை என்றாலும் படம் எடுக்கப்பட்ட விதம் நன்றாக இருக்கின்றது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மேற்கத்தைய பெண்களின் சமூக, மன நிலைப்பாடுகளை படம் எடுத்துக்காட்டுகின்றது. படத்தை ஒற்றக்கையாக நின்று காப்பாற்றுவது Frances McDormand; அழகாக அந்த Oliver Twist மாதிரியான பாத்திரத்திற்கு உயிரேற்றியிருக்கின்றார். Amy Adamsஇன் நடிப்பு கொஞ்சம் அலுப்படிக்கின்றது; அடிக்கடி அவரது “Enchanted” படக் கதாபாத்திரத்தை நினைவு படுத்துகிறது.

இதயத்திற்கு குளிர்ச்சியான படம். உங்கள் காதலர் அல்லது காதலியோடு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget