ட்வைலைட் முதலாம் பாகம் வெளி வந்து உலகமெங்கும் சக்கைபோடு போட்டது. அதே சூட்டுடன் இரண்டாம் பாகம் நிவ் மூன் வெளி வந்து வசமாக இரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது. ஆனாலும் வசூலில் கடும் சாதனை. பல லகரங்களில் டாலர்களை குவித்தது. இப்போது இதே தொடரில் மூன்றாம் பாகம் வெளிவந்துள்ளது. மூன்றாம் பாகமே இந்த எக்கிளிப்ஸ் எனும் பகுதியாகும். இதுவரை இந்த ட்வைலைட் திரைப்படமோ புத்தகமோ வாசிக்காதாருக்கு என்ன இது என்று
ஒரே வியப்பாக இருக்கலாம்.
கதைச் சுருக்கம் என்னவென்றால் பல ஹொலிவூட் திரைப்படங்களிலும் வந்து பயமுறுத்தும் ட்ரகுலா (இரத்தக் காட்டேரி) பற்றிய கதையே இது. இரத்தக் காட்டேரி வந்தால் அவர்களை எதிர்க்க வெயாவூல்ப் எனும் ஒநாய்களும் இருந்தேயாகும். இக்கதையிலும் அதற்கு குறைவில்லை. ஆனாலும் வழக்கத்திற்கு மாறாக மனிதப் பெண்ணுடன் ஒரு வம்பயர் காதலில் வீழ்கின்றது. அந்தப் பெண்ணும் காதலில் வீழ்கின்றாள். இதற்கிடையில் சாதாரணக் காதல் முக்கோணக் காதலாகின்றது ஒரு வெயாவூல்பின் அறிமுகத்தால். வம்பயர் காதலிக்கும் பெண்ணை இந்த வம்பயர்களை காலம் காலமாக வெறுக்கும் வெயார்வூல்பும் காதலிக்கின்றது. இவர்கள் மூன்றுபேரையும் சுற்றியே 4 புத்தகங்களும் 3 திரைப்படங்களும் (கடைசி திரைப்படம் இன்னமும் வெளியாகவில்லை) நகர்கின்றது.
Vampires இருந்தால் திரைப்படத்தில் காதலிற்கு குறைவேயிருக்காது. வம்பயர்கள் கடும் காதல் மன்னர்கள். இந்த திரைப்படத்தில் வரும் Edward அமைதியான வம்பயர். அதாவது மனிதர்களைக் கொலை செய்யாமல் மிருகங்களைக் கொண்டு இரத்தம் அருந்தி பிழைக்கும் ஒருவர். அவருடன் அவரைப்போலவே பழக்கமுடைய ஒரு குடும்பத்தார்.
மறு பக்கத்தில் காலம் காலமாக Fork நகரில் வாழ்ந்து வரும் செவ்விந்திய வழித்தோன்றல்கள். இவர்கள் குடும்பத்தில்தான் அடுத்த நாயகன் Jacop Black பிறக்கின்றார். இவர்தான் அந்த Werewolf குடும்பத்தில் பிறந்த ஒரு பையன்.
அப்புறம் பெல்லா எனும் பெண் இந்த போர்க் நகருக்கு வருகின்றாள். ஒரே நகரில் வசிக்கும் Vampire, Werewolf இந்தப் பெண்ணின் மீது காதல் கொள்கின்றனர்.
இதேவேளையில் Bella வைக் கொலை செய்ய முயலும் ஒரு கெட்ட வம்பயரைக் கொலை செய்துவிட அதனால் கோவப்படும் விக்டோரியா எனும் காதலி வம்பயர் பெல்லாவைக் கொல்ல அலைகின்றது. பாகம் இரண்டிலிருந்து விக்டோரியாவிடம் இருந்து பெல்லாவைக் காப்பாற்றும் பொறுப்பு எட்வார்ட் மற்றும் யேகோப்பிடம்.
இந்த மூன்றாம் பாகத்தில் இந்த விக்டோரியா பிரைச்சனை என்ன ஆனது. இவர்களைப் பழிவாங்க விக்டோரியா என்ன செய்தார் என்பதே கதை. இதற்கு மேலும் கதையைச் சொல்ல விருப்பமில்லை.
முதலம் பாகத்தை பலரும் விரும்பிய போதும் இரண்டாம் பாகத்தை பலரும் பெரிதாகப் போற்றிப் பாராட்டவில்லை. என்னைப் பொறுத்தவரையில் முதலாம் பாகமே சிறப்பாக எடுத்திருக்கின்றனர் அதற்கு அடுத்ததாக மூன்றாம் பாகமான எக்கிளிப்ஸ் சிறப்பாக உள்ளது.
திரைக் காட்சியமைப்புகள் என்னைக் கவர்ந்தது. குறிப்பாக வம்பயர், வேர்வூல்ப் சண்டைக் காட்சிகள் அபாரம். இயல்பாகவே பன்டசி கதைகளில் நாட்டம் உள்ளோர் கட்டாயம் இந்த திரைப்படத்தை விரும்பிப் பார்ப்பர்.