இணையத்தில் இலவசமாக உலாவ ஏர்டெல்லில் புதிய வசதி

மொபைல் ஜாம்பவனான ஏர்டெல்லும், கூகுளும் தற்போது புதிதாக கைகோர்த்துள்ளனர். செல்ஃபோன் மூலமாக இணைய தளத்தைப் பயன்படுத்தும் வசதியை பலரும் பயன்படுத்தி வரும் நிலையில், இதைப் பயன்படுத்தி வர்த்தகத்தை பெருக்க ஏர்டெல் நிறுவனமும், கூகிள் நிறுவனமும் கை கோர்த்துள்ளன. 

இதன்படி, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் கூகிள் (Google), ஜி மெயில் (gmail), கூகிள்+ (Google+) ஆகிய சேவைகளை
எந்தவித டேட்டா கட்டணமும் இன்றி பெற முடியும். இணையதளங்களின் முதல் பக்கத்தை இலவசமாக பார்க்க முடியும். எனினும் இச்சேவையில் டவுன்லோட்ஸ் (Downloads) உள்ளிட்ட கூடுதல் வசதிகளை பெற கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். Click Here For New Smartphones Gallery ஃப்ரீ ஃஜோன் (Free zone) என்ற பெயர் கொண்ட இச்சேவை மூலம் செல்ஃபோன் இணையதளத்தின் வசதியை பல கோடி மக்களுக்கு கொண்டு செல்ல முடியும் என ஏர்டெல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

இதன்மூலம் தகவல் தேடுதல், இ மெயில் வசதி, சமூக தளங்கள் பயன்பாடு ஆகியவற்றை இலவசமாக பெறலாம் என்றும், பார்த்தி ஏர்டெல் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ராஜாராம் தெரிவித்துள்ளார். மொபைல் ஃபோன் மூலமாக இணையதளத்தை பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை பெருகி வரும் நிலையில் இந்த சேவை இன்னும் பல மடங்கு வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ இனி ஏர்டெல் காட்டில் மழை தான்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget