கரு கலைவதை எளிதாக தடுப்பது எப்படி?

கரு கலைவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. தாயின் உடல்நிலையும், கருவை தாங்கும் சத்தும் இல்லாததே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. கருச்சிதைவிற்காக பல்வேறு காரணங்களை மகப்பேறு மருத்துவர்கள் பட்டியலிட்டுள்ளனர். 

கருவானது கர்ப்பப் பையில் சரியான வளர்ச்சி பெறாமல் இருந்தால் கருச்சிதைவு அபாயம் ஏற்படும். அதேபோல் கருவானது கருப்பையில் சரியான முறையில் தங்காமல்
இருத்தலும், கருப்பையின் வாய் திறந்திருத்தலும் அபார்சன் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

சில குறிப்பிட்ட நோய்களுக்கு (புற்றுநோய், இதய பாதிப்பு) எடுத்துக் கொள்ளும் மருந்துகள் கூட கருச்சிதைவை அதிகப்படுத்துகின்றன. நாகரிக மோகத்தால் பெண்கள் புகை பிடிப்பதும், மது அருந்துவதும், புகையிலை போன்ற போதை வஸ்துகளை எடுத்துக் கொள்வதும் கருச்சிதைவு ஏற்பட முக்கிய காரணங்களாகும்.. 

குறைந்தது கர்ப்பம் தரித்த மூன்று மாதத்திற்காவது பயணங்களைத் தவிர்ப்பது நலம். முதல் மூன்று மாதங்களில் கருச்சிதைவு ஆபத்து அதிகமென்பதால் எடை அதிகமான பொருட்களைத் தூக்குதல் கூடாது. நல்ல ஊட்டச்சத்து மிகுந்த, போஷாக்கான உணவு முறையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். 

உயர் ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதனை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். கூடிய மட்டும் நோய்கள் அண்டாமல் பார்த்துக்கொள்வது நல்லது. மீறி நோய் தாக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

எக்காரணம் கொண்டும் சுய வைத்தியம் செய்யக் கூடாது. கர்ப்பிணிகள் இந்த வழிமுறைகளை விழிப்புணர்ச்சியோடு ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே போதும் கருச்சிதைவை முடிந்தவரை தடுத்து விடலாம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget