உலக நாயகி ஸ்ருதிஹாசன் கலக்கல் பேட்டி

ஸ்ருதிஹாசன் தெலுங்கில் பிசியாக உள்ளார். இந்திப் படங்களிலும் நடிக்கிறார். ஐதராபாத்தில் ஸ்ருதிஹாசன் அளித்த பேட்டி வருமாறு:-

மாடலிங், இசை, சினிமா மூன்றும் எனக்கு பிடித்தவை. என்னைப் பற்றிய எல்லா விஷயகளையும் அப்பா கமல், அம்மா சரிகா, தங்கை அக்ஷரா ஆகியோருடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நான் நடித்த படங்களில் ஓமை பிரண்ட், கப்பார் சிங் தெலுங்கு படங்கள் பிடித்துள்ளன. உணவு வகைகளில் தமிழ்நாடு, கேரளா, உணவுகள் மற்றும் ஐதராபாத் பிரியாணி ரொம்ப பிடிக்கும்.

ஓய்வில் வீட்டில் பீரோவில் உள்ள துணிமணிகளை ஒழுங்குபடுத்துவேன். புத்தகங்களை அடுக்கி வைப்பேன். சினிமா பார்ப்பேன். புதிதாக வந்த புத்தகங்களை படிப்பேன். நான் காதலிப்பது நடிப்பையும் என் குடும்பம் மற்றும் நண்பர்களைத்தான். அடுத்தவர்களிடம் எனக்கு பிடிக்கும் விஷயங்கள் திறமை, உண்மையாக இருப்பது கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வது, என் அப்பா கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்றும் ஆசை உள்ளது. என்னைப் பற்றி அப்பா பெருமையாக பேசும் அளவுக்கு வாழ்க்கையில் சாதிக்க வேண்டும்.

என்னை வேதனைப்படுத்திய சம்பவங்களாக நான் கருதுவது அப்பா, அம்மா பிரிந்து போனது. அப்பாவுக்கு நேர்ந்த கார் விபத்து, அம்மா மாடியில் இருந்து கீழே விழுந்தது.

எல்லா முடிவுகளையும் நானே எடுக்க வேண்டும் என்று அப்பா அடிக்கடி சொல்வார். சினிமா பற்றி நான் ஏதேனும் பேசினாலும் அவர் ஆர்வம் காட்ட மாட்டார். வீட்டு வாசலோடு சினிமாவை விட்டுவிட்டு வருவார்.

உடம்பை கட்டுகோப்பாக வைத்துக் கொள்வதற்கு நான் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்கிறேன்.

ரசிகர்களுக்கு நான் சொல்லும் வார்த்தைகள் வாழ்க்கையை உங்கள் கையில் எடுத்துக் கொண்டு வாழுங்கள். தவறு செய்தால் தான் எது சரி என்று புரியும். வாழ்க்கை ஒரு முறைதான். இருக்கிற நாட்கள் சந்தோஷமாக வாழுங்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget