தீபிகா படுகோனே சிறப்பு பேட்டி

ஷாரூக் கானுடன், மீண்டும் ஜோடி சேர்ந்தது பற்றி?
ரொம்பவே மகிழ்ச்சியாக உள்ளது. எனக்குள்ள மிக நெருக்கமான ஒரு சில நண்பர்களில், ஷாரூக்கும் ஒருவர். நான், பெரிதும் நம்பிக்கை வைத்துள்ள மனிதர்களில், அவருக்கு முக்கிய இடம் உண்டு. அவருக்கு ஜோடியாக, எப்போதெல்லாம் என்னை நடிக்க தேடுகிறாரோ, அப்போதெல்லாம், அவர் முன், ஆஜராகி விடுவேன்.

சென்னை எக்ஸ்பிரஸ் படம் குறித்து?
இதில், தமிழகத்தை சேர்ந்த பெண்ணாக நடிக்கிறேன். இதற்காக, கொஞ்சம், "ஹோம் ஒர்க் செய்தேன். நான், தென் மாநிலத்தை சேர்ந்த பெண் என்பதால், இந்த ரோலில் நடிப்பதற்கு, ரொம்ப சிரமப்படவில்லை. மும்பையிலிருந்து, ராமேஸ்வரத்துக்கு வரும் ரயிலில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான், இந்த படத்தின் கதை. ரசிகர்களை, 100 சதவீதம் மகிழ்விக்கும், பொழுது போக்கு படமாக, இது இருக்கும்.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் நடிக்கிறீர்களாமே?
ரோமியோ - ஜூலியட் காதல் கதையை அடிப்படையாக வைத்து, சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் படத்தில் நடிக்கி@றன்.சஞ்சய் லீலா பன்சாலி மட்டுமல்ல; என்னை வைத்து இயக்கும் அனைத்து இயக்குனர்களையும், எனக்கு பிடிக்கும். எனக்குள் மறைந்திருக்கும் ஒவ்வொரு திறமையையும், வெளிக் கொண்டு வருபவர்கள், இந்த இயக்குனர்கள் தான். இதில், பன்சாலிக்கு முக்கிய பங்கு உள்ளது.

உங்களைப் பற்றி தொடர்ந்து,  கிசு கிசுக்கள் வெளியாகிறதே?
ஜாலியான மூடில் வந்த என்னை, காலியாக்காமல் விடமாட்டீர்கள் போலிருக்கிறதே. ஒவ்வொரு படமும், வெளியாகும்போது தான், இதுபோன்ற கிசு கிசுக்கள் வருகின்றன. படம் வெளியானதும், இதை, அனைவருமே மறந்து விடுகிறீர்கள். எனவே, இதுபோன்றவதந்திகளுக்கு பதில் அளிக்க வேண்டியஅவசியம், எனக்கு இல்லை.
ரன்வீர் சிங்குடன்  "கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விட்டதாக...?
கெமிஸ்ட்ரியாவது; பிசிக்ஸாவது. கடுப்பை கிளப்பாதீர்கள். ரன்வீர் சிங், மிகச் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றுவது, இனிமையான அனுபவமாக இருக்கும். உடன் பணியாற்றும் நடிகர் என்பதை தவிர, அவருக்கும், எனக்கும் இடையே, வேறு எதுவும் இல்லை.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget