விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஸ்டார்ட் கீ இல்லாமல், பலர் முகம் சுழிக்கின்றனர். ஏறத்தாழ, அதன் செயல்பாட்டினைப் பெறும் சிறிய வழி ஒன்று உள்ளது. விண்டோஸ் கீயை அழுத்தி, கீ போர்டில் எக்ஸ் (X) கீயினைச் சேர்த்து அழுத்தவும். திரையின் கீழாக, வலது புறத்தில், ஸ்டார்ட் ஸ்கிரீன் அருகே, சிறிய விண்டோ ஒன்று பாப் அப் ஆகும். இந்த விண்டோவில், நாம் வழக்கமாகக் காணும் Desktop, Control Panel, File Explorer, Task Manager, Programs ஆகியவை
கிடைக்கும். இதன் மூலம், விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் புதியதாகப் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் தயக்கமான செயல்பாடுகள் நீங்கும்.
கிடைக்கும். இதன் மூலம், விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் புதியதாகப் பயன்படுத்துபவர்கள் சந்திக்கும் தயக்கமான செயல்பாடுகள் நீங்கும்.