கோச்சடையான் திரைப்படத்தை தீபாவளி வெளியீடாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக லேட்டஸ்ட் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினி படங்கள் என்றாலே, படம் தொடங்குவதற்கு பல மாதங்கள் முன்பே பரபரப்பு எகிறிவிடும். இதற்கு கோச்சடையானும் விலக்கல்ல. ஆரம்பத்தில் கோச்சடையான் எந்த மாதிரி படம் என்பதில் பலருக்கும் குழப்பம் இருந்ததது. எனவே எதிர்ப்பார்ப்பும் இல்லாமலிருந்தது. ஆனால் பரபரப்பான
செய்திகளுக்குப் பஞ்சமில்லை. இதுவும் கூட நல்லதுதான் என்றே ரஜினியும் கருதினார். ஆனால் அவரது படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டதால், தலைவரின் அடுத்த படம் என்ன என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிட்டனர். கோச்சடையான் சர்வதேசத் தரத்தில் உருவாகியுள்ளதாக இயக்குநர் சௌந்தர்யா உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து கூறிவருவதால், அவதார், டின் டின் ரேஞ்சுக்கு இப்போது எதிர்ப்பார்க்க ஆரம்பித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியீடு இதோ அதோ என தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. மூன்று ஸ்டில்கள் தவிர ரசிகர்களுக்கு படத்தின் தோற்றம் குறித்து எதுவும் தெரியாது. ஆனாலும் இந்த மாதத்துக்குள் படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியாகிவிடும் என்று கோச்சடையான் தரப்பில் கூறப்பட்டுள்ளதால், ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையே கோச்சடையான் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதாகவும் படத்தின் புரமோஷன் வேலைகளை ஆரம்பிக்கவிருப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்பில் தெரிவித்துள்ளனர். படத்தின் டீஸர், 'மேக்கிங் ஆஃப் கோச்சடையான்', டிரெய்லர், பாடல்கள் உருவான விதம், கோச்சடையான் செல்போன் என இதுவரை எந்தப் படத்துக்கும் செய்யாத அளவு விளம்பரங்கள் இனி அணி வகுக்கப் போகின்றனவாம். தீபாவளியன்று கோச்சடையான் ரிலீஸ் செய்து ரசிகர்களை டபுள் தீபாவளி கொண்டாட வைக்கத் திட்டமிட்டுள்ளார்களாம்.