விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சாதனங்களில் பயன்படுத்த மொழி பெயர்ப்பு சாதனம் ஒன்றை, சென்ற வாரம் மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த மொழி பெயர்ப்பு சாதனம் தற்போது 40 மொழிகளை சப்போர்ட் செய்கிறது. தொடர்ந்து மொழிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மைக்ரோசாப்ட் மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டு
தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை வெளியான பலவகை மொழி பெயர்ப்பு டூல்ஸ்கள் அனைத்தும் இதில் ஒருமுகப்படுத்தப்பட்டு கிடைக்கின்றன.
டெக்ஸ்ட் மொழி பெயர்ப்பு, கேமரா மொழி பெயர்ப்பு, டெக்ஸ்ட் டு ஸ்பீச் என அனைத்து வகை மொழி பெயர்ப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன. டெக்ஸ்ட் மொழி பெயர்ப்பு என்பது நேரடியானது. மொழி பெயர்க்கப்பட வேண்டிய டெக்ஸ்ட்டினை டைப் செய்து, எந்த மொழியில் இது மொழி பெயர்க்கப்பட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து என்டர் செய்தால், டெக்ஸ்ட் மொழி பெயர்க்கப்பட்டு கிடைக்கும். இது 40 மொழிகளுக்குக் கிடைக்கிறது.
கேமரா மொழி பெயர்ப்பு என்பது, நமக்குப் பொருள் விளங்காத டெக்ஸ்ட்டை, கேமராவில் படமாகப் பிடித்து, அதனை உள்ளீடாக இட்டு, தேவைப்படும் மொழியில் அதன் மொழி மாற்றத்தினைப் பெறுவதாகும். அடையாளங்கள், சில மெனுக்கள், செய்தித்தாள் அல்லது அச்சடிக்கப்பட்ட எந்த ஒரு டெக்ஸ்ட் என எதனையும் படம் பிடித்து, உள்ளீடாகத் தந்து மொழி பெயர்ப்பினைப் பெறலாம்.
டெக்ஸ்ட் டு ஸ்பீச் என்பது, டெக்ஸ்ட் ஒன்றை, அதனைத் தாய் மொழியாகக் கொண்ட ஒருவரின் உச்சரிப்பில் மொழி பெயர்ப்பாகப் பெறுவது. இணைய இணைப்பின்றியும் மொழி பெயர்ப்பினைப் பெறலாம். இதனால், அதிகச் செலவில் ரோமிங் கட்டணம் செலுத்துவதனைத் தவிர்க்கலாம். இதற்கென உள்ள மொழித் தொகுதிக்கான டூல்ஸ்களை டவுண்லோட் செய்தால் போதும்.
விண்டோஸ் ஸ்டோர் அப்ளிகேஷன் எதனைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், அங்கிருந்தவாறே, இந்த மொழி பெயர்ப்பு டூல்ஸ் பயன்படுத்தி பயன் பெறலாம். வேறு ஒரு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், இடது அல்லது வலது திரையில், பிங் ட்ரான்ஸ்லேட்டரை இயக்கி, தேவையான மொழி பெயர்ப்பு பணியினை மேற்கொள்ளலாம்.
ஒரு மொழி பெயர்ப்பு பணியில் வேறு எதனை நாம் எதிர்பார்க்கப் போகிறோம்!. இவையே போதும். இருப்பினும் கூகுள் ட்ரான்ஸ்லேட் டூல் ஒரு விஷயத்தில், இதனை மிஞ்சி நிற்கிறது. தற்போதைய கணக்குப்படி 71 மொழிகளில், கூகுள் ட்ரான்ஸ்லேட் மொழி பெயர்க்கிறது.