சிக்ஸ் பேக் ஆசையும் தீராத சிக்கலும்

இன்றைய இளைஞர்களிடம் அழகின் முகவரி எதுவென்று கேட்டால் சிக்ஸ் பேக் என்பார்கள். அந்த அளவுக்கு சிக்ஸ் பேக் மீது பைத்தியமாக இருக்கிறார்கள். அதற்காக ஸ்டீராய்டு என்கிற ஊக்க மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். இது உயிருக்கே ஆபத்தானது என்கிறார்கள் மருத்துவர்கள். 

பொதுவாக உடலில் சேரும் கொழுப்பு உடலியக்கத்கின் மூலம் இயல்பாகவே கரைந்து போகும்.
சில சமயங்களில் கரையாமல் ஆங்காங்கே சேர்ந்து போகும். இப்படி சேரும் கொழுப்பைக் கரைத்து தசைகளாக வயிற்றுப்பகுதீயில் உருமாற்றுவது தான் சிக்ஸ் பேக். 

ஒருமுறை சிக்ஸ் பேக் கொண்டு வந்து விட்டாலும் அதை தொடர்ச்சியாக பராமரிப்பது கஷ்டம். உழைப்புக்கான சூழ்நிலை நகர வாழ்க்கையில் இல்லை. அதனால் தான் உடற்பயிற்சி மூலம் இதைப் பெற முயல்கிறார்கள். அதற்காக ஒரு சிலர் ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள். அதனால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் ஆபத்து உண்டு. 

ஆண்மைக்கு காரணமாக இருக்கும் ஹார்மோன் டெஸ்டோடீரோன். இயல்காக சுரக்கும் இந்த ஹார்மோனை அதிக அளவில் சுரக்க செய்வது ஸ்டீராய்டு. சரி ஆண்மைக்கான ஹார்மோன் அதிகம் சுரந்தால் நல்லது தானே என்கிறீர்களா? மருத்துவர்கள் அப்படி சொல்லவில்லை. டெஸ்டோடீரோன் அதிகம் சுரந்தால் உடல் எடை கூடும். 

தசைகள் அளவில் பெரிதாகும். அதன்மூலம் ஏற்படும் பக்க விளைவுகள் மிக பயங்கரமானவை. முதலில் ஏற்படுவது ஆண்மைக் குறைவு தான். விளையாட்டு உலகில் இந்த ஊக்க மருந்து குற்றச்சாட்டு மிக அதிகம். வருடத்துக்க 30 ஆயிரம் வீரர்கள் பிடிவடுவார்கள். 

அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளும் ஸ்டீராய்டு வகையைச் சேர்ந்தவைதான். அவற்றை எடுத்தவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையான கதைகள் நிறைய உண்டு. உடற்பயிற்சி எடுத்த சில நாட்களில்லே சிக்ஸ் பேக் வந்துவிடும் என்ற கருத்து பரவலாக உள்ளது. இது தவறு. 

அதுபோன்று தவறான வழிகாட்டுதல் காரணமாக ஸ்டீராய்டு எடுத்துக்கொள்கிறார்கள். இது ஊசி,மாத்திரை வடிவில் கிடைக்கும் பயன்படுத்தியவுடன் கொழுப்பு கரைவது போல் தோன்றும். எடை குறைவதாக நினைப்பார்கள். 

உண்மையில் நடப்பது, ஹார்மேன் சமச்சீரிம்மைதான். மேலும் ஆண்மைக்குறைவு,மலட்டுத்தன்மை, குரல் மாற்றம், கல்லீரல் கேன்சர்,மார்பில் அதீத ரோம வளர்ச்சி, நரம்புத்தளர்ச்சி, பார்வைக் குறைபாடு போன்றவையும் ஏற்படும். அழகான ஆரோக்கியமான உடலுக்கு அன்றாடம் எளிதான உணவு வகைகளும் இயல்கான உடற்பயிற்சியுமே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget