இரு பாலர் மலட்டுத் தன்மைக்கான காரணங்கள்

நமது சமூகத்தில் மலட்டுத்தன்மை மெல்ல மெல்ல பரவுகிறது. பழங்காலத்தில் மலட்டுத்தன்மைக்காக மக்கள் சிகிச்சை எடுப்பதை தயக்கமான ஒன்றாக கருதினார்கள். இன்றோ செயற்கை கருத்தரிப்பை ஆதரிக்கிறார்கள். பெண்ணின் கருமுட்டையும், ஆணின் விந்தணுவையும் சேர்த்து, மருந்துகள், ஹார்மேன்கள் உதவியோடு கருத்தரிக்கச் செய்து பின்னர் கருப்பையில் வைப்பது தான் செயற்கை கருத்தரிப்பு. இதற்கு ஒரு லட்சம் ரூபாய் முதல்
இரண்டு லட்சம் ரூபாய் வரை செலவாகும். 

நகரங்களில் வாழும் தம்பதினரில் 5-ல் ஒரு தம்பதிக்கு குழத்நதையின்மை குறைபாடு உள்ளது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1981-க்குப் பிறகு குழந்தையின்மை குறைபாடு 50 சதவீதம் அதிகரித்துள்ளது. மலட்டுத்தன்மையே இதற்று காரணம். ஆண், பெண் இருவரிடமும் குழந்தையின்மைக்கான காரணங்கள் உள்ளன. 

ஆணின் விந்தணு குறைபாடும், பிற மருத்துவ குறைபாடும் முக்கிய காரணங்களாக உள்ளன. பாஸ்ட்புட், மது, போதைப்பொருள் பயன்பாடு, தூக்கமின்மை, மனஅழுத்தம் போன்றவையும் காரணங்களாக உள்ளன. ஆண்களை ஆராய்ச்சி செய்ததில் அவர்களது மன அழுத்தத்துக்கும் விந்து அணு குறைவதற்கும் நேரடிக் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

பெண்களின் மலட்டுத்தன்மைக்கு ஹார்மேன் சமச்சீரிம்மை, தொற்றுநோய்கள், பெண்ணுருப்பில் காச நோய் இருப்பது, கருப்பை கட், பெலோபியன் டியூப்பில் உள்ள பிரச்சினைகள் முதலியன முக்கிய காரணங்களாகும். 

அத்துடன் சரியான வயதில் குழந்தை பெறாததும் முக்கிய காரணமாகும். 35 வயதில் பெண்ணின் கருமுட்டையின் உற்பத்தியும் தரமும் 90 சதவீதம் குறைந்து விடுகின்றன. தற்போதைய பெண்கள் திருமணத்தையும் குழந்தைப் பேற்றையும் தள்ளிப்போடுகின்றனர். 

ஒரு கட்டடத்தில் அவர்கள் குழந்தை பெறலாம் என தீர்மானிக்கு போது அவர்களது உடலும், உயிர்த்திறணும் அவர்களுக்கு துணை புரியாமல் போய்விடும். யோகாசம், பிரணாயாமம், செய்வதன் மூலம் மனஅழுத்தம் மற்றும் சுற்றுச்சூழலில் ஏற்படும் மலட்டுத்தன்மை வெற்றி கொள்ளலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget