ஷாரூக் கானின் ராசியான ஹீரோயின்கள் பட்டியலில், தீபிகா படுகோனேவும் இடம் பிடித்து விட்டார். "ஓம் சாந்தி ஓம் படத்தில், ஷாரூக் கான் ஜோடியாகத் தான், அறிமுகமானார், தீபிகா. அந்த படத்தின் வெற்றி, தீபிகாவை, பாலிவுட்டில் முன்னணி வரிசைக்கு கொண்டு சென்று விட்டது. இதைத் தொடர்ந்து, பல ஹிட் படங்களில் நடித்த தீபிகா, தற்போது, "சென்னை எக்ஸ்பிரஸ் என்ற படத்திலும், அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இதில், தீபிகாவின் நடிப்பு திறமையை பார்த்து வியந்தாராம், ஷாரூக். மேலும், தங்கள் இருவருக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருப்பதால், தன்னுடைய அடுத்த படமான, "ஹேப்பி நியூ இயர் என்ற படத்திலும், தீபிகாவையே புக் செய்யும்படி இயக்குனர் பாரா கானிடம் கூறி விட்டாராம். இதனால், மகிழ்ச்சியில் ரெக்கை கட்டி பறக்கிறார், தீபிகா.