எளிதாக ஜோதிடம் கற்பது எப்படி - பாகம் 1

ஜோதிடம் என்பது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நம்முடைய ரிஷி முனிகள் தொகுத்து வைத்த புள்ளி விவரங்களாகும் ( Statistics). ஜோதிட வல்லுனர்கள், பல்லாயிரக் கணக்கான மனிதர்களை, உற்று நோக்கி, அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த, நிகழ்வுகளை பதிவு செய்து, ஆராய்ந்து அதனை, முறைப்படி குரு சிஷ்யப் பரம்பரையாக மக்களுக்கு கணிதம்
செய்து, பலன்களை கூறி வருகின்றனர். இந்த நேரத்தில், இந்த கிரக அமைப்பில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்கள் என்ற புள்ளி விவரங்களை வைத்தே பலன் கூறப்படுவதால், ஜோதிட சாஸ்திரம் பொய் இல்லை, அது ஒரு கணிதமே என்று நடைமுறையில் நிரூபிக்கபட்டு வருகிறது.

உயர்நிலை கணக்கு பாடங்களில் ஒன்றே, Numerical Analysis என்ற ஒரு வகை கணக்குப் பாடமாகும். இந்த பாடத்தில் Forward & Backward Interpolations, Newton-Raphson Fomula போன்ற சூத்திரங்களை பயன்படுத்தி, கடந்த 1970, 1980, 1990, 2000, 2010 ஆம் ஆண்டுகளில் சென்னையின் மக்கள் தொகை (புள்ளி விவரங்கள்) தெரிந்து இருந்தால், 2020 ஆண்டில் சென்னையின் மக்கள் தொகை என்னவாக இருக்கும் என்று சொல்லி விடலாம்.

இதேபோல் கணக்கில் மற்றொரு பிரிவு, Permutation and Combination என்ற வகையாகும். இதன் பயன்பாடு ஜோதிடத்தில் கூடுதலாக இருக்கிறது. ஆயிரக் கணக்கான யோகங்கள் இம்முறையிலேயே வகைப் படுத்தப் படுகிறது. இவ்வாறு ஜோதிடத்திற்கும், கணிதவியலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதனால் தான், வாழும் கணித மேதை சகுந்தலா தேவி, ஜோதிடத்தையும் பிராக்டிஸ் செய்கிறாரோ!

ஜோதிடமும் அதைப்போல, நம்மிடம் இருக்கும், உலக நன்மை கருதி நம் முன்னோர்கள் நம்மிடம் கொடுத்துச் சென்ற, ஆயிரக்கணக்கான வருடங்களாக, லட்சக்கணக்கான மக்களிடம் எடுக்கப்பட்ட, தொகுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், அவர்கள் காட்டிய வழியில், சூத்திரங்களை வைத்து கணக்கீடு செய்து, பலன் கூறுவதால், ஜோதிடம் எப்போதும் பொய்யாகாது. அதனால் ஜோதிடமும் ஒரு அறிவியலேயாகும். 

ஃபிரெண்ட்ஸ் என்ற படத்தில், 100 ஆண்டுக்கும் மேற்பட்ட ஒரு கடிகாரத்தை, வடிவேலு உடைத்துவிடுவார். அதன் அருமை தெரியாமல், பழசா, நான் புதுசோ என்று நினைத்தேன் என்பார். நம்மிலும் பலர் இது போல, நம்முடைய அருமை பெருமைகளைத் தெரியாமல் இருக்கிறோம். அமெரிக்காவில் 100 ஆண்டு பழமை வாய்ந்த செருப்பைக் கூட பொக்கிஷமாக பாதுகாக்கிறார்கள். ஆனால், நாம் ஆயிரக்கணக்கான வருஷங்களாக நம்மோடு இருக்கும் பொக்கிஷங்களின் அருமை தெரியாமல் இருக்கிறோம். அதனை தெரிந்துகொள்ளவோ, பாதுகாக்கவோ நினைப்பதுகூட இல்லை.

விஷயம் இல்லாமல் எந்த ஒரு கலையும், இலக்கியமும், சாஸ்திரமும் ஆயிரக்கணக்கான வருடங்களாக தாக்குப் பிடித்து நிலைத்து நிற்க முடியுமா? என்ற கேள்வியுடன் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget