கோலிவுட்டை கலக்க வரும் கீர்த்தி

மேனகாவை நினைவிருக்கிறதா? நெற்றிக்கண் படத்தில் மகன் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர். ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்... பாட்டெல்லாம் பாடுவாரே அவர்தான் மேனகா, நெற்றிக்கண் படத்துக்குப் பிறகு சில படங்களில் நடித்தவர் பிறகு மலையாளத்திலேயே செட்டிலாகிவிட்டார் அஙங்கு 75 படங்கள் வரை நடித்தார். மோகன்லாலுடன் மட்டும் 25 படஙங்களில் ஜோடியாக நடித்தார். பிறகு பிரபல மலையாள தயாரிப்பாளர் சுரேஷ்குமாரை திருமணம்
செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். 

இப்போது அவரது இளைய மகள் கீர்த்தி நடிக்க வந்திருக்கிறார். அதுவும் அம்மா யாருக்கு ஜோடியாக நடித்தாரோ அதே மோகன்லாலுக்கு ஜோடியாக. படத்தின் பெயர் கீதாஞ்சலி. மலையாளத்தில் புகழ்பெற்ற மணிசித்ரதாழ் (சந்திரமுகியின் மூலப்படம்) தொடர்ச்சியாக தயாராகும் இதனை ப்ரியதர்ஷன் இயக்குகிறார். நடுத்தர வயதை தாண்டிய மோகன்லால் மீது ஒரு தலையாய் காதல் கொள்ளும் கேரக்டராம் கீர்த்திக்கு.

அப்படியே தமிழுக்கும் வந்திருங்க மேடம். கார்த்திகா, துளசின்னு நிறைய பிரண்ட்சுங்க இருக்காங்க.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget