ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தில் நடித்த சூர்யா, இப்போது சிங்கம்-2 படத்திலும் நடித்துள்ளார். கடந்த 5-ந்தேதி வெளியான படம் நல்ல வசூல் சாதனை புரிந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சிங்கம்-2வை இந்தியிலும் டப்பிங் செய்து வெளியிட தயாராகி வருகிறார்கள். ஏற்கனவே சூர்யா நடித்த ரத்த சரித்திரம் இந்தியில் வெளியானதால், அப்போதே அங்குள்ள ரசிகர்களுக்கு சூர்யா ஓரளவு தெரிந்த முகமாகி விட்டார்.
அதனால், இந்த நேரத்தில் சிங்கம்-2வையும் வெளியிட்டால் பெரிய வசூல் கிடைக்கவில்லையென்றாலும், சூர்யாவுக்கு ஒரு ரீச் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், அப்படி அவர்கள் ரிலீஸ் பண்ண நினைக்கிறபோதுதான் ஒரு சிக்கல். அதாவது, சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்த அஜய்தேவ்கான் இப்போது சிங்கம்-2 என்ற டைட்டிலில் வேறொரு படத்தில் நடித்து வருகிறாராம்.
இதனால், அதே சிங்கம்-2 டைட்டிலில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என்பதால், இப்போது சூர்யாவின் சிங்கம்-2 படத்தை வேறு தலைப்பில் இந்தியில் வெளியிடும் ஆலோசனை நடந்து வருகிறது.