பெண்கள் எந்த வயதில் அழகாகத் தெரிவார்கள்

மனிதர்கள் எந்த வயதில் அழகாகத் தெரிகிறார்கள் என்று ஒரு கருத்துக் கணிப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது.இந்த கணிப்பு இவ்வளவு நாட்களாக நாம் கொண்டிருந்த எண்ணங்களை உடைத்துப் போட்டுள்ளது. 

பொதுவாக பெண்கள் டீன் ஏஜில் தான் அழகாக தெரிவார்கள் என்பது பெரும்பாலானோரின் கருத்து. ஆனால் நடுத்தர வயதில்தான் பெண்கள்
ஜொலிக்கிறார்கள் என்று இந்த கருத்துக்கணிப்பு சொல்கிறது. 

பெண்கள் எந்த வயதில் அழகாக இருப்பார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட இந்து ஆய்வில் பெண்கள் 30 வயதில் மற்றவர்களுக்கு அழகாக தெரிவார்கள் என்று தெரியவந்தது. ஆண்களிடம் இது பற்றி கேட்ட கேள்விகளுக்கு 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களே அழகாகவும், கவர்ச்சியாகவும் இருப்பதாக நிறையபேர் கூறியுள்ளனர். 

இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் இறுதியாக இதற்கான காரணத்தை கண்டுபிடித்தார்கள். அதன்படி இளம்வயதில் குடும்ப சூழ்நிலையால் தம்மைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் பல பெண்கள், திருமணம் முடிந்து குழந்தை பெற்றுகொண்டு ஒரளவு வாழ்க்கையில் செட்டில் ஆன திருப்தியில் தங்களை அழகுபடுத்திக் கொள்கின்றனர். 

அந்த வயதில் தான் அவர்கள் மற்றவர்களை கவரும் உடைகளையும், அழகு சாதனங்களையும் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். மற்றவர்களுக்கு அழகு தேவதையாகத் தெரிகிறார்கள் என்று தெரிவிக்கிறது இந்த ஆய்வு.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget