மங்கையருக்கு வகை வகையான ரவிக்கைகள்

* குட்டை கை வைத்த ரவிக்கை, தற்போது பெண்களிடையே பேஷனாகி உள்ளது.
* சிறிதளவு கைகள் பூசினால் போல் இருந்தால் தான், குட்டை கை வைத்த ரவிக்கைகள், அவர்களுக்கு பொருந்தும்.
* மிகவும் குண்டான கைகள் உள்ள பெண்கள் மற்றும் மிக ஒல்லியான கைகளைக் கொண்ட பெண்கள், சாதாரண ரவிக்கை தோள் பட்டையில், சிறு சிறு ப்ளீட்ஸ்
கொண்ட ரவிக்கைளை அணியலாம்.
* குண்டாக உள்ள பெண்கள், குட்டை கை உள்ள ரவிக்கை அணிய ஆசைப்பட்டால், அந்த ரவிக்கையை இறுக்கமாக தைத்து விடாதீர்கள். சிறிது தளர்வாக, சிறிதளவே இறக்கம் கொடுத்து தைத்துக் கொள்ளுங்கள்.
* குட்டைக் கையில் இறுக்கமாக வைத்தால், சதை வெளியே தொங்கிக் கொண்டு அசிங்கமாகத் தெரியும்.
* அதே போல், இடுப்பில் உள்ள சதை தெரியாமலிருக்க வேண்டுமானால், இடுப்பு வரையில் இறக்கம் தந்து தைக்க சொல்லுங்கள்.
* முதுகின் அளவை அதிகப்படுத்தி பிளவுசை இறக்கித் தைத்தால், இடுப்பின் சதை மறைந்து, பார்க்க அழகாக இருக்கும்.
* இப்படிப்பட்ட ரவிக்கைகள் அணிவதால், அதுவும் குண்டு பெண்களின் முதுகு ரொம்ப அழகாக இருக்கும்.

நம் உடலிளிருந்து வெளியேறும் வியர்வையால் அதிகம் பாதிக்கப்படுவது நாம் அணியும் ரவிக்கைகள் தான். அதிலும் பட்டு ரவிக்கையானால் புடவையிலும் கறை ஏற்ப்படுத்தி விடும். இப்படி விலையுயர்ந்த ரவிக்கைகளை அடிக்கடி துவைப்பதால் அதன் நிறமும் அழகும், பாதிக்கப்படும்.

வியர்வையால் ரவிக்கை பாதிக்கப்படுவது முதலில் அதன் அக்குள்பகுதி தான். அதை தடுக்க ஒரு மெல்லிய ஸ்பான்ஜ்ஜை அளவாக வெட்டி ரவிக்கையின் அக்குல் பகுதியில் வைத்து ஒன்று இரண்டு ஒட்டு தையலை போட்டு அணிந்தால் வியர்வையை ஸ்பான்ச் உறிஞ்சி விடும். பிறகு ரவிக்கையை கழற்றும் பொழுது இந்த ஸ்பான்ஜ்ஜை மட்டும் நீக்கி விட்டால் ரவிக்கையில் துளி கூட வியர்வை ஒட்டாமல் இருக்கும். ஸ்பான்சை மட்டும் பிரித்தெடுத்து கழுவி மீண்டும் தேவைப் படும் பொழுது தைத்து அணியலாம்.


ஸ்பான்ஜ் கிடைக்கா விட்டால் நாம் வாங்கும் சில கைச் சட்டை, கோட், போன்ற உடுப்புகளின் தோள் பட்டையில் சிறிய ஸ்பான்ஜை வைத்து தைத்திருப்பார்கள். அதை பிரித்தெடுத்து ரவிக்கையில் தைத்துக் கொள்ளலாம். அல்லது ஏதாவதொரு கெட்டி துணியையாவது வைத்து தைத்து அணிந்தால் பிரச்சனை குறையும்.நீண்ட நாட்களுக்கு ரவிக்கை சேதமடையாமல் வைத்து சுத்தமாகவும் அணியலாம்.

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget