ஆப்பிளின் அடுத்த படைப்பு ஐபோன் 5S முழு நிலவரம்

உலகின் முன்னனி நிறுவனமான ஆப்பிள், ஐபோன் வரிசைகளில் தனது அடுத்த படைப்பான ஆப்பிள் ஐபோன் 5S யை விரைவில் வெளியிட உள்ளது. ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5S யை உருவாக்குவதில் கடைசி கட்டத்தில் உள்ளது. ஏற்கனவெ ஆப்பிளின் முந்தைய படைப்பான ஐபோன் 5 மக்களிடத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. அண்மையில் கூட ஆப்பிள் நிறுவனம் விலை கம்மியான ஐபோன்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
இப்பொழுது ஆப்பிளின் அடுத்த படைப்பான ஆப்பிள் ஐபோன் 5S ன் வெளியீடை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். ஆப்பிள் ஐபோன் 5S பற்றி உங்களுக்கு தெரிய வேண்டிய விஷியங்களை பாருங்கள்.

ஆப்பிளின் அடுத்த படைப்பு ஐபோன் 5S என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இது ஐபோன் 5 போலதான் இருக்கிறது.

அதற்க்காக ஐபோன் 5S ஐபோன் 5 போலவே இருக்கும் என்று அர்த்தமில்லை. இதன் சிறப்பம்சங்கள் மாறும்.

இதுவரை வெளிவந்த தகவலின் படி பார்க்கும் பொழுது ஐபோன் 5Sன் உள்ளமைப்பு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்று தெரிகிறது.

அதாவது ஐபோன் 5S ஏ7 பிராசஸர் கொண்டு வரக்கூடும்.

ஐபோனின் முந்தைய படைப்புகளில் பேட்டரி பிரச்சனைகள் இருந்தன. அதனால் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5Sல் நீண்ட ஆயுள்கொண்ட பேட்டரியை உருவாக்கும்.

ஐபோனின் முந்தைய படைப்புகளை விட இதில் சிறந்த கேமராக்கள் வரலாம்.

ஐபோன்களில் போட்டோ எடுக்கும் பொழுது ஒரு சில நேரங்களில் போட்டோவில் நம் கண்களில் சிகப்பு புள்ளி போன்று தெரியும் அதனால் ஐபோன் 5Sல் இரண்டு எல்ஈடி பிளாஷ்கள் வரக்கூடும்.

ஐபோன் 5Sல் பிங்கர் பிரின்ட்ஸ் ஸ்கேனிங் டெக்னாலஜி வரலாம் என்று பேச்சுகள் அடிபடுகின்றன.
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget