எக்ஸெல் தொகுப்பில் ஆட்டோ பிட் : எக்ஸெல் ஒர்க்புக்கில், நெட்டு வரிசையில் டேட்டாவினை அமைக்கையில், செல்லின் அகலத்திற்கும் மேலாக டேட்டா இருந்தால், செல் அதனை ஏற்பதில் தள்ளாடத் தொடங்கும். டேட்டாவிற்குப் பதிலாக #### எனக் காட்டப்படும். இதனைத் தவிர்க்க, செல் அகலத்தினைச் சற்று அதிகமாக்க வேண்டும். இதனை ஆட்டோ பிட் (Auto Fit) என்ற செயல்பாட்டின் மூலம் மேற்கொள்ளலாம். பார்மட் மெனு சென்று, Column submenu
தேர்ந்தெடுத்து, அதில் Auto Fit என்பதில் கிளிக் செய்து இந்த செயலை மேற்கொள்ளலாம். ஆனால் நாம் எல்லாமே வேகமாக, சுருக்கு வழியில் மேற்கொள்ளவே விரும்புகிறோம் இல்லையா! இதற்கென ஒரு மிக மிகச் சிறிய சுருக்கு வழி உள்ளது. எந்த நெட்டு வரிசையில் இந்த Auto Fit செயல்பாட்டினை அமலாக்க விரும்புகிறீர்களோ, அந்த வரிசையின் மேல்புறம் செல்லுங்கள். அதன் லேபில் இருக்குமிடம் வரை செல்லுங்கள். பின் அதன் வலது புறம் உள்ள பார்டரைப் பாருங்கள். அதாவது, வரிசைக்கான லேபிள்களுக்கு நடுவே உள்ள நெட்டு வரிக்கோடு. இதில் கர்சரைக் கொண்டு செல்லவும். இப்போது உங்கள் மவுஸ் பாய்ண்ட்டர் இரண்டு புறமும் அம்புக்குறி உள்ள அடையாளமாக மாறும். இப்போது டபுள் கிளிக் செய்திடுங்கள். உங்கள் கண் முன்பாகவே, அந்த நெட்டு வரிசை, அதில் உள்ள நீளமான டேட்டாவிற்கேற்ற வகையில் மாறிக் கொள்ளும்.
செல்லில் டெக்ஸ்ட் : எக்செல் செல் ஒன்றில் டெக்ஸ்ட் ஒன்றை டைப் செய்கையில் அது செல்லையும் தாண்டி வெளியே செல்வது பலருக்கு எரிச்சலை வர வழைக்கும். செல்லுக்குள்ளாகவே டெக்ஸ்ட் அமைய வேண்டும் என்பதுவே உங்களின் விருப்பம். என்ன செய்யலாம்? கவலைப்படாமல் முதலில் டெக்ஸ்ட்டை டைப் செய்திடுங்கள். டெக்ஸ்ட் முழுவதும் டைப் செய்தவுடன் செல்லைக் கிளிக் செய்து தேர்ந்தெடுங்கள். இப்போது Format என்னும் பிரிவிற்குச் சென்று கிளிக் செய்திடுங்கள். அதில் Cells பிரிவைத் தேர்ந்தெடுத்து அதன்பின் அதில் உள்ள Alignment டேபை அழுத்துங்கள். இப்போது கிடைக்கும் பிரிவுகளில் Wrap Text என்ற செக் பாக்ஸைத் தேர்ந்தெடுங்கள். அதில் டிக் மார்க் செய்து ஓகே கொடுத்து வெளியேறுங்கள்.
இப்போது நீங்கள் அடித்த டெக்ஸ்ட் அதே செல்லில் ஒழுங்கு படுத்தப் பட்டிப்பதைப் பார்க்கலாம். ஒரு சிலர் டெக்ஸ்ட்டை செல்லினுள் அடிக்கையில் ஆல்ட் + என்டர் தட்டி வரிகளை அமைப்பார்கள். அது நேரத்தையும் நம் உழைப்பையும் வீணாக்கும்.